Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது சாராயம் இல்லையா விஷமா! பரிதாபமாக உயிரிழந்த மீனவர்கள்!

இது சாராயம் இல்லையா விஷமா! பரிதாபமாக உயிரிழந்த மீனவர்கள்!

இது மீன் பிடிப்பதற்கான சரியான காலம் என்பதால் பெரும்பாலான மீனவர்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரையில் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனையடுத்து தமிழ்நாட்டிலுள்ள மீனவர்கள் பலரும் அங்கு சென்று தங்கி மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மதியம் கோடியக்கரையிலிருந்து பாம்பன் பகுதியை சேர்ந்த ஜான்(45),அதே பகுதியை சேர்ந்தசெல்வேந்திரன்(47),தாமஸ்(55),அந்தோணி(42),வினோத்(38) மற்றும் போஸ் (43) ஆகியோர் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.இவர்கள் அங்கையே தங்கி மீன் பிடிப்பதாக திட்டமிட்டு கடலுக்கு சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அவர்கள் வலையில் 3 லிட்டர் கொண்ட சாராயம் போல இருந்த பாட்டிலை எடுத்துள்ளனர்.இது மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்துள்ளனர்.இதனையடுத்து யாரும் பார்க்காத நேரத்தில் வினோத்,அந்தோணி மற்றும் போஸ் ஆகியோர் அந்த விஷ தண்ணீரை மது என்று நினைத்து குடித்துள்ளனர்.

இதனையடுத்து விடியற்காலையில் அவர்களது படகு கரை ஒதுங்கியது.படகு கரை ஒதுங்கியும் அந்த மூவரும் எழுந்திரிக்காமல் அப்படியே படுத்திருந்திருந்துள்ளனர்.அவர்கள் கூட இருந்த மற்ற நபர்கள் அழைத்தும் எழுந்திரிக்காத காரணத்தால் பதறிபோய் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதனையடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் போஸ் மற்றும் வினோத் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.இந்த செய்தியை அறிந்த அவர்களது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இது குறித்து வேதாரண்யம் கடலோர போலீஸ் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் இவர்கள் இறப்பிற்கு காரணமாக கடலில் கிடைத்த அந்த மர்ம திரவம் விஷம் தான் என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version