Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முட்டை அதிகளவில் சாப்பிட்டால் ஆபத்தா? வெளியான ஷாக் தகவல் !!

 

முட்டை அதிகளவில் சாப்பிட்டால் ஆபத்தா? வெளியான ஷாக் தகவல்

முட்டையில் புரதச்சத்து, நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் ஆகியவை நிறைந்திருக்கின்றன.

விலை மலிவாக கிடைக்கும் முட்டை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையானவை. ஏனென்றால், முட்டையில் சத்துக்கள் அதிகமாக உள்ளன.

முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம் உட்பட மனித வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

மேலும், முட்டையில் விட்டமின் D மற்றும் கால்சியம் அதிகமாக உள்ளது. இதனால், நாம் தினசரி முட்டை சாப்பிட்டு வந்தால் நமக்கு நம் உடம்பில் உள்ள எலும்புகள் வலிமை பெறும்.

ஆனால், முட்டையை நாம் அளவோடு சாப்பிட்டால் நல்லது. ஆனால், அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிட்டால் சிறு, சிறு பிரச்சினைகள் நம் ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவித்துவிடும்.

முட்டை அதிகமாக எடுத்துக் கொண்டால் வரும் பிரச்சினை என்னவென்று பார்ப்போம் –

வயது பொருத்து முட்டையின் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இளம் வயதினர் முட்டையை நன்றாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வயது ஆக, ஆக முட்டையின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது.

அதேபோல் முட்டையின் மஞ்சள் கருவை வயிறு சம்பந்தப்பட்டவர்கள் சாப்பிடக்கூடாது. தப்பித்தவறி சாப்பிட்டால் உங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்திவிடும்.

ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொள்ளலாம். வாரத்திற்கு 4 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.

இளம் வயதினர் ஒரு நாளைக்கு 2 முட்டைகள் எடுத்துக் கொள்ளலாம். முடிந்தவரையில் மஞ்சள் கருவை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

முட்டையில் கொலஸ்டிரால் இருப்பதால் முட்டையை அளவோடுதான் சாப்பிட வேண்டும்.

காலை உணவாக முட்டையை சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். காலையில் சாப்பிடும்போது உணவோடு முட்டை எடுத்துக் கொண்டால் கொலஸ்டிரால் பிரச்சினை அதிகமாக வரும்.

முட்டையை டயட்டில் இருப்பவர்கள் முக்கிய உணவாக சாப்பிடுவார்கள். அது நல்லதுதான். ஆனால், முட்டை மஞ்சள் கருவை சாப்பிட வேண்டாம். ஏனென்றால், அதிலுள்ள சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடும்.

முட்டையை அதிகளவில் எடுத்துக் கொண்டால், அது உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். அஜீரணக் கோளாறு, அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

 

Exit mobile version