Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்கள் கை தவறினால் ஆபத்தா..?? அதற்கு என்ன அர்த்தம்..??

வீட்டில் நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்களுள் சில பொருட்கள் மங்களகரமான பொருட்களாக இருக்கலாம், சில பொருட்கள் தெய்வீக அம்சம் கொண்ட பொருட்களாக இருக்கலாம். மஞ்சள், குங்குமம், விபூதி இது போன்ற பொருட்களை மங்களகரமான பொருட்கள் என்று கூறுவோம். அரிசி, சர்க்கரை, பால், உப்பு, எண்ணைய் இது போன்ற பொருட்களை தெய்வீக அம்சம் கொண்ட பொருட்கள் என்று கூறுவோம்.

எனவே இது போன்ற பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாகவும், பொறுமையாகவும் கையாள வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். இந்த பொருட்களை நாம் கையாளும் பொழுது கீழே சிந்தினால் அது ஆபத்தானது அல்லது அபசகுனமானது என்றும் நமது முன்னோர்கள் கூறுவர்.

எனவேதான் நமது முன்னோர்கள் இந்த பொருட்களை மிகவும் கவனமாக கையாளுவார்கள். இவ்வாறு கவனமாக கையாளும் பொழுதும் ஒரு சில பொருட்கள் கைத் தவறி கீழே சிந்துகிறது என்றால், அது ஏதோ ஒன்றைக் குறிக்கிறது என்று அர்த்தம்.

1. குங்குமம் கீழே தவறினால்:
குங்குமம் என்பது மிகவும் புனிதமான மற்றும் மங்களகரமான ஒரு பொருளாகும். கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பொழுது கடவுளின் ஆசிர்வாதமாக இந்த குங்குமத்தை நாம் வாங்கி வருவோம். இந்த குங்குமத்தை தினமும் நமது நெற்றியில் வைத்துக் கொள்ளும் பொழுது ஒரு விதமான நேர்மறை எண்ணங்கள் நமக்குள் தோன்றுவதை நம்மால் உணர முடியும்.

அத்தகைய சிறப்பம்சம் கொண்ட இந்த குங்குமம் கீழே தவறினால் அபசகுனமாக கருதப்படுகிறது. ஆனால் இந்த குங்குமம் கீழே தவறினால் நமக்கு வெற்றிகளும், நல்ல அணுகூலங்களும் கிடைக்கப் போவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆனால் இந்த குங்குமத்தை நாமாக கீழே கொட்ட கூடாது. அவ்வாறு கொட்டினால் அது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.

2. அரிசி:
அரிசி என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. எனவே தான் நமது முன்னோர்கள் காலை எழுந்ததும் குளித்துவிட்டு உடல் சுத்தத்துடனும், மன சுத்தத்துடனும் இந்த அரிசியை தொட வேண்டும் என கூறுவர். இதற்காகத்தான் காலை எழுந்ததும் குளித்துவிட்டு சமையல் செய்ய தொடங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

அரிசியை எடுக்கும் பொழுது முடிந்த அளவிற்கு கீழே சிந்தாமல் எடுக்க வேண்டும். ஒரு வேளை கீழே தவறினால் காரியத்தடை ஏற்படப் போவதை குறிக்கிறது. புதிதாக ஒரு செயலை தொடங்க இருக்கக் கூடிய சமயத்தில் அரிசியானது கீழே தவறினால், அந்த செயலில் பல தடைகளையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதை குறிக்கிறது.

3. எண்ணெய்:
சமையலறையில் நாம் பயன்படுத்தக்கூடிய எண்ணெயை மிகவும் சிக்கனமாகவும், கவனத்துடனும் கையாள வேண்டும். எண்ணெயை சிக்கனமாக பயன்படுத்தக்கூடிய வீடுகளில் பணவரவு அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் எண்ணெயை அதிகமாக பயன்படுத்தும் பொழுது உடல் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

நவகிரகங்களில் சனிபகவானின் அம்சம் கொண்டதுதான் இந்த எண்ணெய். எனவே இந்த எண்ணையை நாம் அடிக்கடி கீழே சிந்தினால் சனிபகவானின் கோபத்திற்கு ஆளாகி பல தோஷங்கள் உருவாகலாம். மேலும் எண்ணெய் கீழே சிந்தினால் அந்த நாளில் ஏதேனும் பொருள் நஷ்டமோ அல்லது வியாபார நஷ்டமோ ஏற்படும் என்பதையும் குறிக்கிறது.

4. பால்:
நாம் தினமும் பால் வாங்கியவுடன் அந்தப் பாலை காய்ச்சி, சிறிது சர்க்கரை சேர்த்து கடவுளுக்கு நெய்வேத்தியமாக படைத்த பின்னர் நாம் குடிக்கும் பொழுது, தெய்வங்களின் அருள் நமக்கு கண்டிப்பாக கிடைக்கும். மேலும் வெண்மை நிறம் கொண்ட இந்த பாலானது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது.

அத்தகைய பாலை கீழே கொட்டினால் அந்த வீட்டில் உள்ள யாரேனும் ஒருவரின் மீது புரளிகள் ஏற்படலாம் அல்லது காரிய தடைகள், பிரச்சனைகள் இது போன்றவைகள் ஏற்படலாம் என்பதை குறிக்கிறது.

5. உப்பு:
உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் கொண்டது என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அத்தகைய உப்பை கீழே சிந்தாமல் கையாள்வது என்பது மிகவும் அவசியம். இத்தகைய உப்பு கீழே சிந்தும் பொழுது அந்த வீட்டில் பண விரயம் மற்றும் பணத் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை உப்பானது கீழே சிந்தினால் அதனை யாரும் மிதிப்பதற்கு முன்பாக, சுத்தமாக அள்ளி விட வேண்டும்.

Exit mobile version