Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்!

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்!

அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் பெருகும்.

அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் கனவு வந்தால் பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்தி கிடைக்கும். செல்வாக்கு உயரும்.

இடி மற்றும் மழை சேர்ந்து கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பணச்செலவு ஏற்படும் என்று பொருள்.

ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதைக் குறிக்கிறது.

கடற்கரையில் இருப்பது போல் கனவு கண்டால் வாழ்வில் உயர்வு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

குளத்தில் குளிப்பது போல கனவு வந்தால் இறைவனால் ஏற்படும் நன்மைகளை யாராலும் தடுக்க முடியாது என்பது போல், உங்களுக்கு கிடைக்கும் நற்பெயரையும், வெற்றியையும் யாராலும் பறிக்க இயலாது என்று பொருள்.

தென்றல் வீசுவது போலவும், தென்மேற்குப் பருவக்காற்று இதமாகக் கடந்து செல்வது போலவும் கனவு கண்டால் எல்லா விருப்பங்களும் நிறைவேறும் என்று பொருள்.

வானம் கனவில் வந்தால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரப்போகின்றது என்று பொருள். வாழ்வில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழப்போகிறீர்கள். என்று கூறுவார்கள்.

Exit mobile version