தயிருடன் உப்பு சேர்ப்பது நல்லதா? இல்லை சர்க்கரை நல்லதா?
நம்மில் பலரும் தயிர் சாப்பிடும் பொழுது உப்பு சேர்த்து சாப்பிடுவோம். ஒரு சிலர் உப்புக்கு பதிலாக சர்க்கரை கலந்து சாப்பிடுவோம். அதிக மக்கள் தயிருடன் உப்பை சேர்த்து சாப்பிடுவதை தான் வழக்கமாக கொண்டுள்ளனர்.
நாம் தயிருடன் உப்பை சேர்த்து சாப்பிடும் பொழுது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. உப்பு உணவுக்கு சுவையை சேர்க்கின்றது. உப்பில் அயோடின் சத்து அதிகமாக இருக்கின்றது. இதை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று பார்க்கலாம்.
தயிருடன் உப்பை சேர்த்து சாப்பிடுவதால் செரிமான அமைப்பு பலம் பெறுகின்றது. தயிருடன் உப்பை சேர்த்து சாப்பிடுவதால் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவி செய்கின்றது.
என்னதான் உப்பை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் சில தீமைகளும் நம் உடலுக்கு கிடைக்கும். அதாவது அதிகப்படியாக உப்பை சேர்த்து சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். மேலும் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். மேலும் தினமும் தயிருடன் உப்பை சேர்த்து சாப்பிட்டால் சரும பிரச்சனைகள் ஏற்படும். எனவே தயிருடன் அளவாக உப்பு சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
தயிருடன் உப்புக்கு பதிலாக சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.