முதல்வர் கேட்ட அந்த கேள்வி! தலை குனிந்த எதிர்க்கட்சித் தலைவர்!

0
113

பொது மக்களை சந்திப்பது பெரிய விஷயமா? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு காணொளி மூலமாக பேசுவது பெரிய விஷயமா? என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சேலம் மாவட்டம் ஏர்வாடி அருகே இருக்கின்ற வாணியம்பாடியில் இருக்கின்ற, அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அந்த சமயத்தில் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கு ஏற்றவாறு ஆட்சி நடத்தி வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவருக்கும், ஜெயலலிதாவிற்கும், வாரிசுகள் இல்லை மக்கள் தான் அவர்களுடைய வாரிசுகள் கொரோனா பேரிடர் காலத்தில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்டங்களிலும் நேரில் சென்று நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றேன்.

மக்களை சந்திப்பது பெரிய விஷயமா? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு காணொளி மூலமாக பேசுவது பெரிய விஷயமா? என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். முன்னதாக திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றார், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி மாவட்டந் தோறும் நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.