Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருத்துவர் பணிக்கு தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்? உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு?

Is it mandatory to pass Tamil Eligibility Test for doctor job? Action order issued by High Court Madurai Branch?

Is it mandatory to pass Tamil Eligibility Test for doctor job? Action order issued by High Court Madurai Branch?

மருத்துவர் பணிக்கு தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்? உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு?

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளங்குறிச்சியை சேர்ந்தவர் டாக்டர் ஜிஷா. மலையாளியான இவர் மருத்துவ படைப்பை கேரளாவில் முடித்தார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த ஜானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அரசு மருத்துவமனை டாக்டராக ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2021 இல் நியமிக்கப்பட்டார்.

இவர் அரசு உதவி மருத்துவ பணிக்கான தேர்வில் பங்கேற்க தமிழ் தகுதி தேர்வு வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த தனி  நீதிபதி தமிழ் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற அறிவிப்பினை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.

அதை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார்  பி.டி ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். அந்த விசாரணையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே ரவீந்திரன், அரசு பிளீடர் திலக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். தமிழ் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. இதை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை என வாதிட்டனர்.

அதனைத் தொடர்ந்து அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் மருத்துவர் நியமனம் தொடர்பான நடவடிக்கைகள் இந்த அப்பீல் மனுவின் இறுதி உத்தரவை பொருத்தே அமையும் என உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பான  விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

Exit mobile version