Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

படிக்கும் வயதில் இது தேவையா? பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!!

the-person-who-threatened-the-student-by-taking-a-naked-video-was-arrested

the-person-who-threatened-the-student-by-taking-a-naked-video-was-arrested

படிக்கும் வயதில் இது தேவையா? பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!!

ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெற்றது . இதை தொடர்ந்து ஆன்லைன் ஆப் ஒன்றை டவுன்லோட் செய்து பத்தாம் வகுப்பு மாணவி பயன்படுத்தி வந்துள்ளார்.

இதில் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த விக்கி வயது 25 என்பவருடன் ஆன்லைன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவர் பத்தாம் வகுப்பு மாணவியிடம் சகோதரன் முறையில் பழகியதாக கூறப்படுகிறது. இதை நம்பிய மாணவி தனது புகைப்படங்களை பரிமாறிக் கொண்டார். இதைத் தொடர்ந்து மாணவியை ஆபாசமாக புகைப்படங்களை எடுத்து அனுப்புமாறு கட்டாயப்படுத்தி உள்ளார்.

இதை சம்மதிக்காத மாணவி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அனுப்பாமல் இருப்பதற்கு 25000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மாணவி தன் பெற்றோரிடம் இதைப் பற்றி கூறினார்.

இது குறித்து மாணவியின் தந்தை கடந்த வாரம் ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியில் தலைமறைவாக உள்ள விக்கியை கைது செய்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

பிளானட் ஆப் ரோமியோ என்ற ஆப் வாயிலாக ஓரினச்சேர்க்கையாளர்களை மிரட்டி பணம் மற்றும் போன் பறிப்பில்  ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் சாத்தான்காடு காவல் நிலையத்தில் விக்கி மீது ஏராளமான வழக்குகள் நிலுவையை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஆவடி மகளிர் போலீசார் விக்கியை போக்சோவில் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

படிப்பதற்காக பெற்றோர்கள் மொபைலை வாங்கி கொடுக்கிறார்கள். மாணவிகளோ தவறான விஷயத்திற்கு படுத்துகிறார்கள். பெற்றோர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்துகிறார்கள்.

Exit mobile version