நடிகைகளை ஐட்டம் என்று அழைப்பது சரியா..?? கோபத்தில் கொந்தளித்த பிரபல இயக்குனர்..!!
கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படம் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் இயக்குனர் கோபி நயினார். நிலாவிற்கு ராக்கெட் விடும் அளவிற்கு அறிவியலில் வளர்ந்த நம் நாட்டில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க ஒரு கருவி இல்லை என்பதை தைரியமாக அறம் படம் மூலம் வெளிச்சம் போட்டு காட்டி இருப்பார்.
இந்த படம் நயன்தாராவிற்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம். உண்மையை சொல்லப்போனால் அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்பதற்கு இந்த படம் மட்டுமே நியாப்படுத்தியது என்று கூறலாம். இப்படி ஒரு ஹிட் படத்தை கொடுத்த கோபி நயினாருக்கு ஏனோ ஹீரோக்கள் வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள்.
அதனால் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஆண்ட்ரியாவை வைத்து மனுஷி என்ற படம் மூலம் கோபி நயினார் கம்பேக் கொடுத்துள்ளார். இந்த படமும் அறம் அளவிற்கு வெற்றியை பெறும் என்பது படத்தின் டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. இந்நிலையில் கோபி நயினார் படத்தை ப்ரமோட் செய்யும் விதமாக தொடர்ந்து சில பேட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், “சினிமாவில் அது என்ன சார் ஐட்டம் டான்ஸ்? நடிகைகளை ஐட்டம் என்று சொல்வது முறையா? இதையெல்லாம் தணிக்கை குழு எப்படி அனுமதிக்கிறது என்றே தெரியவில்லை. மோசமான ஆடைகள் அணிந்து நடிகைகள் குத்தாட்டம் போடுவதை என் மகளுடன் அமர்ந்து என்னால் பார்க்க முடியவில்லை.
இதுபோன்ற காட்சிகளுக்கெல்லாம் தணிக்கைக் குழு ஒன்றுமே சொல்லாது. ஆனால் ஏதாவது கருத்துள்ள படம் வரும்போது மட்டும் அதை சொல்லக்கூடாது, இதை சொல்லக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பதோடு பல வெட்டுகளை செய்யும்” என அவரின் ஒட்டுமொத்த கோபத்தையும் மிகவும் தைரியமாக பேசியுள்ளார்.