Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலில் சூடு பட்டால் பேஸ்ட் பயன்படுத்துவது சரியா? இது முழு விவரம்!!

#image_title

 

உடலில் சூடு பட்டால் பேஸ்ட் பயன்படுத்துவது சரியா? இது முழு விவரம்!!

நம் உடலில் சூடு பட்டுவிட்டால் அந்த இடத்தில் கொப்பளம் அல்லது சிவப்பு நிறத்தில் ஆகும். இதற்கு பல் துலக்கும் பேஸ்ட்டை மருந்தாக பயன்படுதினால் என்ன ஆகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

நாம் சமையல்கட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுதோ அல்லது துணிகளை அயர்ன் பாக்ஸ் வைத்து தேய்த்துக் கொண்டிருக்கும் பெழுதோ சூடு பட்டு கொப்பளம் வருவது சாதாரணமான ஒன்று. இதை எவ்வாறு சரி செய்வது என்று பார்க்கலாம்.

 

இவ்வாறு கொப்பளம் அல்லது கைகளில் சிவப்பு நிறம் வருவது நான்கு வகைப்படும். முதல் மற்றும் இரண்டாம் வகைகளை நாம் வீட்டிலேயே சரி செய்து கொள்ளலாம்.

 

இதில் முதல் வகை என்பது கைகளில் சிவப்பு நிறமாக தோன்றுவது. இரண்டாவது வகை என்பது கொப்பளம் வருவது. மூன்றாவது மற்றும் நான்காவது வகை தற்கொலை செய்ய முயற்சி செய்பவர்களுக்கு வரும்.

 

நமக்கு சூடு பட்டுவிட்டால் கொப்பளம் வராமல் இருக்க சூடு பட்ட இடத்தை தண்ணீரில் மூழ்க வைப்போம். அவ்வாறு இல்லாமல் சிலர் சூடு பட்ட இடத்தில் பல் விலக்கும் பேஸ்டை வைப்பார்கள். அவ்வாறு செய்வது முற்றிலும் தவறு. பல் விலக்கும் பேஸ்டை வைப்பதால் கிருமிகள் அதகரித்து பிரச்சனை தான் அதிகமாகும்.

 

உங்களுக்கு சூடு பட்டால் கோழி முட்டை ஒன்றை உடைத்து அதை ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளவும். அதை நன்கு கலக்கி விட்டு சூடுபட்ட இடத்தில் கலக்கி வைத்துள்ள முட்டையில் சிறிதளவு எடுத்து தேய்த்து விடவும். பிறகு உப்பு சிறிதளவு எடுத்து முட்டையை தேய்த்த இடத்தில் இட்டு அப்படியே விட்டு விடவும். கொப்பளம் வராமல் போகும். 15 நிமிடம் கழித்து வலி, எரிச்சல் எதுவும் இருக்காது.

 

அல்லது கேன் தேரிஸ் எனப்படும் ஆயில்மென்ட்டை வாங்கி தேய்த்து இந்த காயங்களை குணப்படுத்தலாம். இந்த ஆயில்மென்ட்டில் உள்ள கேன் தேரடின் எனப்படும் ஆல்கலாய்டு தான் இந்த காயங்களை குணப்படுத்த உதவுகின்றது. முதல் வகை எரிச்சலுக்கு இந்த மருந்தை பயன்படுத்தினால் சூடு பட்ட சிவப்பு நிறம் இருக்காது. மேலும் இரண்டாவது வகையான கொப்பளமும் ஏற்படாது.

Exit mobile version