செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இத்தனை நன்மைகளா! 

0
336
#image_title

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இத்தனை நன்மைகளா!

நம் வீட்டில் இப்போது தண்ணீர் குடிக்க பெரும்பாலும் சில்வர் பாத்திரங்களை பயன்படுத்துகிறோம். மேலும் கேன் வாட்டர் மினரல் வாட்டர் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் இதன் மூலம் வரும் தீமைகள் நமக்கு தெரிவதில்லை.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு பாத்திரங்களை வீடுகளில் பார்ப்பது மிகவும் அரிது. நம் முன்னோர்கள் தண்ணீரை குடிக்க பெரும்பாலும் செம்பு பாத்திரத்தை தான் பயன்படுத்துகின்றனர். இதன் மூலமாக செம்புத் தாதுவும் நமது உடலுக்கு கிடைக்கின்றது.

இன்னும் பலவிதமான நன்மைகள் இந்த செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதால் நம் உடலுக்கு கிடைக்கின்றது. அது போலவே தீமைகளும் இந்த செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் இருக்கிறது. ஆகையால் இந்த பதிவில் செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

செம்பு பாத்திரமானது தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இதனால் செம்பு பாத்திரத்தில் தண்ணீரை காய்ச்சி குடிப்பதால் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கின்றது.

* செம்பு பாத்திரத்தில் தண்ணீர் காய்ச்சி குடிப்பதால் நமக்கு ஏற்படும் செரிமான பிரச்சனையை குணப்படுத்த உதவுகின்றது.

* செம்பு பாத்திரத்தில் தண்ணீர் காய்ச்சி குடிப்பதால் இரத்த சோகை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இது இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும் உதவுகின்றது.

* செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதால் கர்ப்பமான பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

* செம்பு பாத்திரத்தில் தண்ணீர் காய்ச்சி குடிப்பதால் புற்றுநோயும் கட்டுப்படுத்தப்படுகிறது. அதாவது செம்பு பாத்திரத்தில் ஆன்டி ஆக்சிடன்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் புற்று நோய் செல்கள் வளரவிடமால் தடுக்கப்படுகிறது.

* மேலும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் காய்ச்சி குடிப்பது நமது சருமத்திற்கும் நல்லது. மேலும் இது முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

செம்பு பாத்திரத்தின் நன்மைகள் என்னவென்று பார்த்தோம். அடுத்து இந்த செம்பு பாத்திரத்தில் உள்ள தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

செம்பு பாத்திரத்தின் தீமைகள்

* செம்பு பாத்திரத்தை துருபிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துருபிடித்தால் பாத்திரம் பச்சை நிறமாக மாறும். இந்த பச்சை நிறத்தில் கிரீன் காப்பர் கார்பனேட் உள்ளது. இவை நம் உடலில் வயிற்று வலி, பல் சொத்தை, செரிமான பிரச்சனை, கண் பிரச்சனை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

செம்பு பாத்திரத்தை தண்ணீர் மட்டும் தான் காய்ச்சி குடிக்க வேண்டும். சமைக்க மட்டீம் பயன்படுத்த கூடாது. ஏனென்றால் செம்பு பாத்திரத்தில் சமைக்கும் பொழுது உணவில் உள்ள சத்துக்களும், செம்பு பாத்திரத்தின் சத்துகளும் சேர்ந்து கீழ் கண்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

* தலைவலி

* சிறுநீரக கோளாறு

* உடல் சோர்வு ஏற்படும்

* இளநரை

* பார்வை திறனில் குறைபாடு

* எலும்புகள் பலம் இல்லாமல் இருக்கும்.