பிறந்த நாளன்று இந்திய அளவில் கனிமொழிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்!

0
221

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்ற நிலையில், ஊழல் ராணி என்னும் ஹேஷ்டேக்கை திமுகவின் எதிர்ப்பு அரசியல் கட்சியினர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பிலே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் வந்த பல்வேறு போராட்டங்களை நடத்திய தேசிய அளவில் அங்கீகாரத்தை பெற்று இருக்கின்றார். மத்திய அரசியலில் அவருக்கு அவ்வளவாக பெயர் இல்லாவிட்டாலும் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்த வேண்டும். என்ற காரணத்திற்காக, தமிழகத்தில் கனிமொழியை சற்று அந்த கட்சியினர் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த சட்டசபை தேர்தலில் தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக இறங்கி இருக்கின்றார் கனிமொழி. இந்த நிலையில் அவர் தன்னுடைய 53வது பிறந்த தினத்தை இன்றைய தினம் கொண்டாடி வருகின்றார். இதனை தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி முன்னாள் முதலமைச்சரும் தன்னுடைய தந்தையுமான கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி இருக்கிறார். இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில், ஊழல் ராணி என்னும் ஹேஷ் டேக்கை திமுகவின் எதிர்ப்பு அரசியல் கட்சியினர் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். இந்த ஹாஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி இருக்கிறது.