தமிழ் சினிமாவில் குருவையும், சீடரையும் இணைத்தது இந்தப் பாடல் தானா?

0
85
#image_title

தமிழ் சினிமாவில் குருவையும், சீடரையும் இணைத்தது இந்தப் பாடல் தானா?

தமிழ் சினிமாவில் பாலு மகேந்திரா என்பவருக்கு ஒரு தனி இடம் உண்டு. யதார்த்தமான படங்களை எடுத்து இயல்பான கதாபாத்திரங்களை கண்முன் நிறுத்துவதில் வல்லவரான இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் தான் இயக்கிய படங்கள் என்னமோ குறைவுதான். ஆனால் பல தேசிய விருதுகளை வென்ற படங்களை இயக்கி உள்ளார். ஒளிப்பதிவாளராக தனது திரையுலக பயணத்திற்கு தொடங்கி அவர் பிறகு சிறந்த இயக்குநராக விளங்கினார்.

வீடு, சத்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள் ஆகிய மூன்று திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார். அதேபோல அழியாத கோலங்கள், கோகிலா ஆகிய படங்களுக்கு சிறந்த திரைக்கதை-க்கான தேசிய விருது பெற்றார். அத்துடன் மாநில அரசு விருதுகள், ஃபிலிம் விருதுகள், நந்தி விருதுகள் என பல்வேறு விருதுகளை பெற்றவர் இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள்தான்.

அவரிடம் உதவியாளராக இருந்த பலரும் இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக உள்ளனர். அவர்களின் மிகவும் குறிப்பிட்டுத்தக்கவர் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்கள். பாலுமகேந்திரா அவர்களின் உதவி இயக்குநராக இருந்து பிறகு பாடலாசிரியராக மாறி தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் பாடல் வரிகள் மூலம் ஆட்சி செய்தவர் நா. முத்துக்குமார் அவர்கள் தான். அவர் எண்ணற்ற பாடல்களை எழுதி இரண்டு முறை தேசிய விருது வென்றார். அவர் தன்னுடைய குருநாதரான இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள் இயக்கிய “ஜூலி கணபதி” என்ற படத்தில் பாடல் எழுதியுள்ளார்.

இருவரும் இணைந்தது ஜூலி கணபதி என்ற படத்தில் தான். இப்படத்தில் இடம்பெற்ற “எனக்குப் பிடித்தப் பாடல்; அது உனக்கும் பிடிக்குமே” இந்த பாடத்தில் தான் குருவான இயக்குனர் பாலு மகேந்திராவும் சீடரான நா. முத்துக்குமாரும் இணைந்தது. இந்த படத்திற்கு இளையராஜா அவர்கள் இசை அமைத்திருந்தார். படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், இந்த பாடல் மிகப் பெரும் அளவில் ஹிட் அடித்தது. இன்றளவும் சிறந்த மெலோடி பாடலாக இந்த பாடல் விளங்குகிறது அதற்கு காரணம் இளையராஜா அவர்களின் இசையும் நா. முத்துக்குமார் அவர்களின் கவித்துவமான பாடல் வரிகளும் தான்.