Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏலியன்கள் பூமியில் இருப்பது உண்மையா!!

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும்,வானியல் துறையின் தலைவராகவும் உள்ளவர்தான் அவி லோப். இவர் “Extraterrestrial:The first sign of intelligent life beyond earth” என்னும் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்தில் அவர் விண்வெளியிலிருந்து வரும் கற்கள், பாறை போன்ற பொருட்கள் அனைத்தும் விண்வெளியில் உயிர்கள் உள்ளன என்பதை நிரூபிப்பதாக தெரிவித்துள்ளார்.

அண்டத்தை நோக்கி ஆண்டுக்கு பல முறை பல விண்கற்கள் வருவது இயற்கை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் இக்கூற்றை அவர் பொய்யாக்கும் வகையில் பூமியை நோக்கி வரும் விண் கற்கள் ஏலியன்களால் வீசி எறியப்பட்ட குப்பைகள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் ஏலியன்கள் பல புதிய செயல்கள் மூலம் இங்குள்ள விஞ்ஞானிகளுடன் தொடர்புகொள்ள நினைப்பதாகவும், இதற்காக ரேடியோ சிக்னல்களை பயன்படுத்துவதாகவும், அரிதாக காணப்படும் தட்டு போன்ற வடிவிலான பொருட்களும் ஏலியன்களால் அனுப்பப்படுகின்றவையே எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வேற்றுகிரகவாசிகள் இங்கு உள்ள மனிதர்களிடம் தங்களை வெளிக்காட்ட விருப்பமில்லாமல் மனிதர்களுடன் மறைந்து வாழ்வதாகவும் முன்னாள் இஸ்ரேலிய ஜெனரல் ஒருவரும் பகீர் தகவலை வெளியிட்டார். அதன்பிறகு இத்தகவல் பற்றிய வேறு எந்த கருத்தும் வெளியாகவில்லை.

தற்போது அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் நள்ளிரவில் வானத்தில் தோன்றிய நீல நிற பொருட்கள் அங்குள்ள மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அதனை தங்கள் செல்போன் மூலம் படம் பிடித்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.

இதனைப் பார்த்த மக்கள் உண்மையில் ஏலியன்கள் உலகில் இருக்கக் கூடுமோ எனவும், இந்த நீலநிற பொருளும் ஏலியன்களால் அனுப்பப்பட்ட ஒன்றுதான் எனவும் அச்சத்தில் உள்ளனர்.

Exit mobile version