சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி !

0
219
corona virus

சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி !

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் ஜாக்கி சானுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 2000 பேரருக்கும் மேல் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 80000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றுதான் இந்த வைரஸ் மூலம் நடக்கும் தாக்குதலுக்கு கோவிட்-19 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசியாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ஜாக்கி சானுக்கு கோவிட் 19 பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு உருவானது. மேலும் அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இது உலகெங்கும் உள்ள அவர் ரசிகர்களுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்த இந்த தகவல் பொய்யானது என இப்போது தெரியவந்துள்ளது.

தனது டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி தெரிவித்த ஜாக்கி சான் ‘அனைவரின் அன்புக்கும் நன்றி. நான் நலமாகவும் பத்திரமாகவும் இருக்கிறேன்.அதுபோல தனிமை படுத்தப்படவில்லை. எல்லோரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் வாழ ஆசைப்படுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.