பலரும் தங்களது உடல் எடையை குறைக்க பலவிதமான முயற்சிகளை செய்து வருகின்றனர், அதில் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஒன்று சீரக தண்ணீர். சீரக தண்ணீர் உண்மையாகவே உடல் எடை இழப்பில் உதவுகிறதா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும், உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் உண்மையாகவே சீரக தண்ணீர் உடல் எடை குறைப்பில் நல்ல பலனை தருகிறது. சீரக தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறைவது மட்டுமின்றி செரிமான கோளாறு, மலசிக்கல், இன்சுலின் அளவு, டீடாக்ஸ் போன்றவற்றை செய்கிறது. சீரக தண்ணீர் எப்படி உடல் எடை குறைப்பில் உதவுகிறது என்பதை பற்றி இங்கே காண்போம்.
சீரக தண்ணீரில் கலோரி குறைவாக இருக்கிறது, 1 ஸ்பூன் சீரகத்தில் வெறும் 7 கலோரி மட்டுமே உள்ளது. கலோரி குறைவான சீரக தண்ணீரை குடிப்பதன் மூலம் உடல் எடையில் பெரிய மாற்றத்தை காணலாம்.
இரவு முழுவதும் சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதனை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும், இப்படியே தினமும் குடித்துவர உங்களின் செரிமான மண்டலம் சீராக வேலை செய்யும். இதுதவிர வாந்தியுணர்வு, வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சனைகளையும் இது சரிசெய்கிறது. இந்த நீரை பருகுவதால் நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு பசியுணர்வு ஏற்படாமல் இருக்கும், இதனால் நீங்கள் அதிகமாக உணவு எடுத்துக்கொள்ளமாட்டீர்கள், இதனால் உடல் எடை கூடுவது தடுக்கப்படுகிறது.
மேலும் சீரக தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது, இதனால் உங்கள் உடலின் திசுக்கள் மற்றும் செல்கள் புத்துணர்ச்சி பெறுவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. எனவே தினமும் சீரக தண்ணீர் குடிப்பது உடல் எடை இழப்புக்கு உதவுவது மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது.