வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் தீவிர மன அழுத்தம் காரணமாக தன்னுடைய பொறுப்புகள் சிலவற்றை சகோதரியிடம் ஒப்படைத்துள்ளதாக செய்தி வெளியானது
இதையடுத்து தற்போது அவர் இறந்திருக்கலாம் என்ற ஊகங்கள் மீண்டும் எழுந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இப்படி தான் பொது வெளியில் கிம் ஜாங் உன் தென்படாததால், அவர் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியானது. ஆனால், அதை எல்லாம் உடைக்கும் வகையில், நாட்டில் உரத்தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் கலந்து கொண்டு, இறப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இதையடுத்து தற்போது அந்த ஊகம் மீண்டும் எழுந்துள்ளது.
தென் கொரிய செய்தி வலைத்தளமான ஷின்மூங்கோ சாங்கின் கூற்றை அபத்தமானது என்று குறிப்பிட்டுள்ளது.இந்த ஊகம் கிளம்புவதற்கு முக்கிய காரணம், வடகொரியாவில் உருவாகியுள்ள புதிய இணை தளம் தான், அதில் புகைப்பிடித்தல் குறித்த புதிய ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, நாட்டில் புகைபிடித்தல் எதிர்ப்பு ஆராய்ச்சி மையம் நாட்டின் கணினி வலையமைப்பு அமைப்பில் புகை எதிர்ப்பு 1.0 என்ற வலைத்தளம் சமீபத்திய வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த தளம் புகைபிடிப்பதைத் தவிர்ப்பது குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக துவங்கப்பட்டுள்ளது. ஏனெனில் கிம் அடிக்கடி புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர், இதனால் நிச்சயமாக அவர் இதை செய்திருக்க முடியாது என்று கூறப்படுவதால், இந்த யூகம் மீண்டும் கிளம்பியுள்ளது.