Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாதவிடாய் இரத்தப்போக்கு கட்டி கட்டியாக போகுதா? அப்போ க்யூராக தென்னம் பூ கஷாயம் வச்சி குடிங்க!!

பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக அதிகப்படியான உதிரப்போக்கு பிரச்சனையால் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை அவர்கள் சந்திக்கின்றனர்.

அதிகப்படியான மாதவிடாய் உதிரப்போக்கால் ஏற்படும் பாதிப்புகள்:

**வயிற்று வலி
**வயிறு கனமான உணர்வு
**மனநிலை மாற்றம்
**அசௌகரிய உணர்வு

அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட காரணங்கள்:

**ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
**மன அழுத்தம்
**கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை
**தைராய்டு பாதிப்பு

மாதவிடாய் கால கெட்டி உதிரப்போக்கை சரி செய்ய உதவும் சித்த மருத்துவ குறிப்புகள்:

தேவையான பொருட்கள்:-

1)சுத்தம் செய்த வாழைப்பூ – ஒரு கப்
2)தயிர் – ஒரு கப்
3)உப்பு – சிறிதளவு
4)மிளகு – கால் தேக்கரண்டி
5)தண்ணீர் – ஒன்றரை கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் அளவிற்கு வாழைப்பூ எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி வாழைப்பூவை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு ஒரு கப்பில் பசுந்தயிர் ஊற்றி வேகவைத்த வாழைப்பூவை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

பிறகு அதில் கால் தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கெட்டி உதிரப்போக்கு பிரச்சனை சரியாகும்.

மற்றொரு தீர்வு:

தென்னம் பூ கஷாயம்:

தேவையான பொருட்கள்:-

1)தென்னம் பூ – ஒரு கப்
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

தென்னம் பூவை வெயிலில் நன்றாக காய வைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஆதில் ஒரு தேக்கரண்டி தென்னம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானத்தை இளஞ்சூடான பதத்தில் பருகி வந்தால் மாதவிடாய் கால கட்டி இரத்தப்போக்கு பிரச்சனை சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை துண்டு – ஒன்று
2)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கற்றாழை துண்டை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு கொத்தமல்லி விதைகளை இடித்து போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.அரை கப் அளவிற்கு சுண்டி வரும் வரை கொதிக்கவைத்து வடிகட்டி பருகினால் கட்டி
உதிரப்போக்கு பிரச்சனை சரியாகும்.

Exit mobile version