Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சமந்தாவை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தாரா நாக சைதன்யா? வைரலாய் பரவிய தகவல் உண்மையா?

சமந்தாவை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தாரா நாக சைதன்யா? வைரலாய் பரவிய தகவல் உண்மையா?

நடிகை சமந்தா தனது நான்காண்டு திருமண வாழ்க்கையில் இருந்து விலகி நாக சைதன்யாவை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார்.

நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்ட மையோட்டிஸிஸ் என்ற உடல்நலப் பிரச்சனை சில தினங்களுக்கு முன்னர் சமூகவலைதளப் பக்கம் மூலமாக பகிர்ந்திருந்தார்.. அதில் “கடந்த சில மாதங்களாக நான் மையோட்டிசிஸ் எனும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டேன்.

இதில் இருந்து முழுவதும் மீண்டதும் இதை அறிவிக்கலாம் என இருந்தேன். ஆனால் நாம் நினைத்ததை விட இது அதிக காலம் எடுத்துக் கொள்கிறது. விரைவில் குணமாகிவிடுவேன் என மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர்” எனக் கூறி இருந்தார்.

இதையடுத்து ரசிகர்களும் சக திரையுலக கலைஞர்களும் அவருக்கு ஆறுதலாக நம்பிக்கை வார்த்தைகளும் கூறி வந்தனர். இந்நிலையில் திடீரென சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்து நலம் விசாரித்ததாக தகவல்கள் பரவின. இந்த தகவல் சமூகவலைதளங்களிலும் வைரலானது.

ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இரு தரப்பினரும் இந்த தகவல் உண்மை என்று அறிவிக்கவில்லை. யாரோ கிளப்பிவிட்ட வதந்தி இணையத்தில் வைரலானது. ஆனால் நாக சைதன்யாவின் தம்பியும் நடிகருமான அகில் மட்டும் சமூகவலைதளம் மூலமாக அவர் நலமாக விரும்புவதாக ட்வீட் செய்திருந்தார்.

Exit mobile version