கோவின் இணையதளத்தில் தனிநபரின் தகவல்கள் கசிந்ததா? மத்திய அரசு மறுப்பு!

0
183

கோவின் இணையதளத்தில் தனிநபரின் தகவல்கள் கசிந்ததா? மத்திய அரசு மறுப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்பதிவு செய்வதற்கு வசதியாகவும் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் cowin என்னும் இணையதள வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் கொரோனா தடுப்பூசி செளுத்திக்கொள்ள விரும்புபவர்கள் இந்த cowin இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கோவின் இணையதள பக்கத்தில் இருந்து மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய விவரங்கள் கசிந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், அப்படி எந்த ஒரு தனிநபரின் தகவலும் கோவின் இணையதளத்தில் இருந்து கசியவில்லை என மத்திய மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், கோவின் இணையதளத்தில் சேமிக்கப்பட்ட எந்த ஒரு தனி நபரின் தகவலும் கசியவில்லை என்றும் கோவின் இணையதளம் பாதுகாப்பானது மற்றும் பயனாளியிடமிருந்து பெறப்பட்ட முழுத் தரவுகளும் கோவின் இணையதளத்தில் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளது.