நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் ‘பிஎப் தொகை’ பிடித்தம் செய்யப்படுகின்றதா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

0
290
#image_title

நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் ‘பிஎப் தொகை’ பிடித்தம் செய்யப்படுகின்றதா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

அரசு நிறுவனத்தில் வேலை செய்தாலும் சரி தனியார் நிறுவனத்தில் வேலை செய்தாலும் சரி உங்கள் பணி காலத்தில் நீங்கள் பெறும் வருமானத்தில் இருந்து சிறிது தொகை பிஎப் ஆக பிடித்தம் செய்யப்படுவது வழக்கமாக இருக்கிறது. இந்த பிஎப் தொகை வருங்காலத்தில அதாவது ஓய்வு காலத்தில் பணத் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

ஆனால் ஒருசிலர் பணி காலத்தில் முக்கிய தேவைகளுக்காக தங்களுக்கான பிஎப் தொகையை தங்கள் விருப்பத்திற்கு முழுவதும் அல்லது பகுதி என்ற அளவில் எடுத்துக் கொள்ள முடியும். ஓய்விற்கு பின் பிஎப் தொகை எடுப்பது சுலபம். ஆனால் பணியின் போதோ அல்லது வேலையை விட்டு நின்றாலோ தங்கள் பிஎப் தொகையை எவ்வாறு பெறுவது என்பது குறித்து கீழே தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பணியின் போது பிஎப் தொகையை எடுக்க வேண்டும் என்றால் அவற்றிற்கு முறையான காரணம் இருக்க வேண்டும். அதாவது மருத்துவம், திருமணம், கல்வி, நிலம் வாங்குவது, வீட்டுக் கடன், வீடு சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே பிஎப் தொகை எடுக்க முடியும். ஆனால் எதிர்பாராத விதமாக தங்களது வேலையை இழந்துவிட்ட ஊழியர்கள்
தங்களின் பிஎப் பணத்தில் இருந்து 75% மட்டுமே திரும்ப பெற முடியும். ஒருவேளை 2 மாதங்களை கடந்தும் வேறு நிறுவனத்தில் வேலை கிடைக்காத பட்சத்தில் மீதமுள்ள 25% பிஎப் தொகை அவர்களுக்கு கிடைக்கும்.

தங்களது பிஎப் தொகையை எடுக்க தேவைப்படும் ஆவணங்கள்:-

1)UAN எண்

2)தொலைபேசி எண்

3)ஆதார் நம்பர்

4)வங்கி கணக்கு எண்

5)பிஎப் தொகை எடுக்க தேவையான ஆவணங்கள்

பிஎப் தொகை எடுக்கும் முறை:-

ஸ்டெப் 01:

முதலில் இணையத்தில் EPFO e-SEWA போர்டலில் லாக் இன் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 02:

கிளைம் செக்சனுக்கு சென்று தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பிழையில்லாமல் பதிவிட வேண்டும்.

ஸ்டெப் 03:

பணம் எடுப்பதற்கான முறையான காரணத்தை பதிவிடவும்.

ஸ்டெப் 04:

கேட்கப்படும் விவரங்களை பதிவிட வேண்டும்.

ஸ்டெப் 05:

ஒடிபி எண்ணை பதிவிட்டு கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 06:

இறுதியாக பிஎஃப் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகும்.