Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடு முதுகில் மட்டும் அழுத்தம் இறுக்கம் எற்படுதா? அப்போ இனி இந்த தவறை செய்யாதீங்க!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் முதுகு வலி பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.இந்த முதுகு பாதிப்பு வயது வரம்பின்றி அனைவருக்கும் ஏற்படக் கூடியதாக இருக்கிறது.மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர்களுக்கு முதுகு வலி பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது.

முதுகுவலி வரக் காரணங்கள்:

1)வயது முதிர்வு
2)கால்சியம் பற்றாக்குறை
3)ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல்
4)முது பகுதியில் காயம் உண்டாதல்
5)முதுகு தண்டு தேய்மானம்

எல்லோருக்கும் ஒரே விதமான முதுகு வலி வருவதில்லை.சிலருக்கு கீழ் முதுகு தண்டு வடத்தில் அதிக வலி இருக்கும்.சிலருக்கு மீள் முதுகு பகுதியில் வலி ஏற்படும்.இன்னும் சிலருக்கு முதுகின் நடுப்பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படும்.அதாவது மார்பு பகுதியில் இறுக்கம் ஏற்படுவது போன்று முதுகு பகுதியிலும் அழுத்தம்,இறுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.சில சமயம் மூச்சுவிட சிரமமாக இருக்கும்.

முதுகின் நடுப்பகுதியில் வலி வருவதற்கான காரணங்கள்:

முதுகு தண்டு பகுதியில் வலி வர பல காரணங்கள் சொல்லப்படுகிறது.நாம் உண்ணும் உணவாலும் இந்த வலி வரலாம்.அமில உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுகின் நடுப்பகுதியில் வரக்கூடும்.

உணவுக் குழாயில் அதிக அமிலம் படிந்தால் அவை விரிவடைந்து மார்பு பகுதியில் பிடிப்பை ஏற்படுத்தும்.சிலருக்கு மார்பு பகுதியில் அழுத்த உணர்வு ஏற்படும்.மார்பை போன்றே பின்புற நடு முதுகு தண்டு பகுதியில் வலி ஏற்படும்.அமர்ந்த நிலையில் இருத்தல்,நடத்தல்,எழுதல் போன்ற செயல்களின் போது பிடிப்பு,இறுக்கம் ஏற்படும்.

நாம் புளிப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் இந்த பிரச்சனை வரும்.அதேபோல் மது பழக்கம் இருபவர்களுக்கு இந்த வலி அடிக்கடி ஏற்படும்.இது தவிர அதிக டீ பருகுதல்,உணவை தவிர்த்தல் போன்ற காரணங்களால் முதுகின் நடுப்பகுதியில் வலி ஏற்படும்.

நமது உணவுக் குழாயில் தேங்கி இருக்கும் அமிலம் மற்றும் காற்று நீங்க புளிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.காரமான உணவுகள்,பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.இந்த நடு முதுகு வலி அதிகரித்தால் அலட்சியம் செய்யாமல் உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

Exit mobile version