ரேஷன் கடை அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?? உடல் எடையை குறைக்குமா?? முக்கிய தகவல்

0
410
Is ration shop rice good for diabetics?? Does it lose weight?? IMPORTANT INFORMATION!!

ரேஷன் கடை அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?? உடல் எடையை குறைக்குமா?? முக்கிய தகவல்!!

ரேஷன் கடை அரிசி சர்க்கரை நோய்க்கு நல்லது. சுகரை அதிகரிக்காது. எடையை குறைக்க உதவும். போன்ற தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருவதோடு மட்டுமில்லாமல் அனைவராலும் நம்பப்பட்டு வருகிறது.

பொதுவாக ரேஷன் கடையில் விற்பனை செய்யப்படும் அரிசி தனியாக உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதில்லை. அதற்கான சுத்தப்படுத்தும் முறைகளும் வேறானது இல்லை. இந்த அரிசி வகை எல்லாரும் சாதாரணமாக வாங்கக்கூடிய அரிசி வகைகளில் ஒன்று தான். அப்புறம் எதனால் அதனுடைய குணாதிசயங்கள் மாறுபட்டதாக உள்ளது என நிறைய பேருக்கு சந்தேகம் எழலாம்.

பொதுவாக ரேஷன் அரிசி அது போல் நிறம் வருவதற்கும், மணம் வருவதற்கும் அதனுடைய செயல்முறைகளே காரணம். ரேஷன் அரிசிக்கு தயார் செய்யப்படும் நெல்மணிகளை ஊற வைத்து பின்னர் அதனை வேக வைப்பார்கள். இதனால் தவிட்டில் உள்ள சில சத்துக்கள் அரிசிக்கு சென்றுவிடும்.

அதன்பின்னர் அதனை சில செயல்முறைகள் செய்த பின்னர் சத்துக்கள் சில இழந்து நமக்கு கிடைக்கக்கூடியது தான் நாம் சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய புழுங்கல் அரிசி.

 அரிசி விநியோகங்களில் உணவு பஞ்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்படியே மூட்டையாக கட்டி குடோன்களில் சேகரித்து வைப்பது வழக்கம்.நாம் தற்போது வாங்கும் அரிசி வகை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு விளைவிக்கப்பட்டவையாக இருக்கும்.இதன் காரணமாகவே ரேசன் அரிசியில் அந்த நிறமும் மணமும் வருகிறது.

இதனால் இந்த அரிசி வகைகள் சற்று கடினமாக இருக்கும். சாப்பிடுவதற்கு சற்று சிரமமாக இருக்கும். இயல்பாகவே அரிசி லேசாக,மென்மையாக  இருந்தால் நிறைய சாப்பிடுவோம். அதே கடினமாக இருந்தால் குறைவாகவே எடுத்துக் கொள்வோம்.

இது போன்ற காரணங்களினால் தான் அது உடல் எடையை குறைப்பதற்கும், சர்க்கரை வியாதியை 10 சதவீதமோ அல்லது 20 சதவீதமோ குறைப்பதற்கும் மறைமுகமாக உதவியிருக்கும். இந்த காரணங்கள் தான் ஒழிய வேறு எந்த காரணங்களும் இல்லை. எனவே ரேசன் கடை அரிசியானது சர்க்கரை நோயை குறைக்காது. மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு உதவாது. இதுபோன்ற தகவல்கள் உண்மை அல்ல.