ரோஷிணி ஹரிப்ரியன் விலகுகிறாரா?. அடுத்த பாரதி கண்ணம்மா யார்?

0
189

நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சீரியலாக மாறியுள்ளது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. கறுப்பாக பிறந்த ஹேமாவை யாருக்கும் தெரியாமல் மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார்.

இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் தான் ஹேமா என்று தெரியாமலேயே குழந்தையின் மேல், அதிக அன்பாகவும், உயிராகவும் இருக்கிறான் பாரதி.

தனது பள்ளியில் சமையல் சமைக்கும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா. இந்நிலையில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த விஷயத்தை மருத்துவர் மூலம் தெரிந்துக் கொண்டாள் கண்ணம்மா.

தனது இன்னொரு குழந்தையை தேடி அலைகிறாள். அலைந்து திரிந்த பின்னர் ஒருவழியாக தனது இன்னொரு குழந்தை ஹேமா தான் என்ற விஷயம் அவளுக்கு தெரிய வந்துள்ளது. இந்த உண்மை எப்போது பாரதிக்கு தெரிய வரும்? அவன் எப்போது டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பான் என்பதை தெரிந்துக் கொள்ள மிகவும் ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இப்படி மிகவும் விறுவிறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து, கண்ணம்மாவாக நடித்து வரும், ரோஷினி விலகுவதாக செய்திகள் பரவி வருகின்றன.


இன்னும் 2 வாரங்கள் மட்டுமே அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பார் என்றும், அதன் பிறகு அவருக்கு பதில் வேறொருவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அது என்ன தான் அழகாக இருந்தாலும் வேறு ஒருவரை கண்ணம்மா கதாபாத்தில் உடனே ஏற்றுக்கொள்ள ரசிகர்களுக்கு மனம் இல்லை. என்ன தான் நடக்கிறது என்பதை பார்ப்போம்.