Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த மாத இறுதியில் சசிகலா வெளி வருகிறார்? வழக்கறிஞர் தகவலால் அதிமுக வட்டாரங்கள் அதிர்ச்சி!!

இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, நீதிமன்ற உத்தரவை அடுத்து, பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

 

தண்டனைக் காலம் முடிவடையும் நிலையில், அவர் செப்டம்பர் மாத இறுதியில் வெளிவருவார் என சசிகலாவின் வழக்கறிஞரான செந்தூர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், “செப்டம்பர் மாத இறுதிக்குள் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வெளிவருவார் என நம்புகிறேன். இதை எனது ஆசைக்காக கூறவில்லை.

 

சட்டத்தின்படி, பெங்களூர் சிறையின் விதிமுறைகளின் படியே தான் கூறுகிறேன். சிறைத்துறை வழங்கும் சலுகைகளின்படி அவர் கண்டிப்பாக செப்டம்பர் மாத இறுதிக்குள்ளோ அல்லது அக்டோபர் மாத முதல் வாரத்திலோ வெளிவருவார்” என்று உறுதியாக நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

 

மேலும், “சிறையில் நன்னடத்தை விதிகளின் படி கடந்த மார்ச் மாதமே சசிகலா விடுதலை பெறுவதற்கான தகுதிகளை பெற்றுவிட்டார்.

 

கொரோனா தொற்று, ஊரடங்கு காரணமாகவே சசிகலாவின் விடுதலை தள்ளிப்போய் இருக்கிறது.

 

மேலும் பேசிய அவர், சசிகலாவின் 300 கோடி சொத்து முடக்கம் குறித்து வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸ் அவருக்கு சென்று சேர்ந்ததா? என்று தெரியவில்லை.

 

அவ்வாறு சென்று சேர்ந்திருந்தால் சிறை சூப்பிரண்டு மூலமாக என்னை சசிகலா தொடர்பு கொண்டிருப்பார். அதன்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தியிருப்போம்.

 

கடந்த 7 மாத காலமாக கொரோனா முடக்கத்தால் சசிகலாவை நான் சந்திக்க முடியவில்லை” என சசிகலாவின் வழக்கறிஞரான செந்தூர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version