சீமான் செல்வாக்கு மக்கள் மத்தியில் தேய்கிறதா?

0
112

 

சீமான் செல்வாக்கு மக்கள் மத்தியில் தேய்கிறதா?

 

சீமான் என்றாலே ஆவேசம், சீமான் என்றாலே கோபம், சீமான் என்றாலே அனல் தெறிக்கும் மேடைப்பேச்சு என்று தான் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. மற்றொருபுறம் சீமான் என்றாலே பொய், சீமான் என்றாலே கட்டுக்கதை என்ற விமர்சனங்களும் அரசியல் வட்டாரங்களில் உண்டு.

 

 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பல்வேறு மேடைகளில் பலவிதமாக பேசி வருகிறார்.

 

சீமான் அவர்கள் மீது தேச துரோக வழக்கு, அவதூறு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.

 

 

இயக்குனர் மணிவண்ணன் அவர்களிடம் உதவியாளராக இருந்த சீமான் அவர்கள் இனியவளே, வீரநடை, தம்பி போன்ற திரைப்படங்கள் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அதன் பிறகு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் அவர்களுக்கு இயக்குநர்கள், நடிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அவருடைய நிலையற்ற அரசியல் நிலைப்பாட்டால் அடுத்தடுத்து கட்சியை விட்டு விலகி சென்றனர்.

 

 

2019 ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் அவர்களும் தற்போது கட்சி இல்லை. ஆரம்பத்தில் ஆதரவளித்த இயக்குநர் பாரதிராஜா, கவுதமன் உள்ளிட்ட பல பிரபலங்களும் கட்சியில் இன்று இல்லை காரணம் சீமான் அவர்கள் நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என மாறி, மாறி பேசுகிறார் என்ற குற்றச்சாட்டும் தான் என்று கூறப்படுகிறது. .

 

 

 

2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இளைஞர்கள் மத்தியில் சீமான் அவர்களுக்கு செல்வாக்கு பெருகியது. சமூக வலைத்தலங்கள் வாயிலாக சீமான் அவர்களின் பேச்சு மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்களிடம் போய் சேர்ந்தது இருப்பினும், சீமான் அவர்களின் தற்போதைய நிலைப்பாடு அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 

 

குறிப்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சாத்தான்கள் என்று கூறியது பெரும் சர்ச்சை ஆனது. இந்துத்துவா அமைப்பு, ஆர்.எஸ்.எஸ் மாதிரியான கட்சி தான் நாம் தமிழர் கட்சி என்ற கருத்தும் தற்போது பரவி வருகிறது.

 

 

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு பல மடங்கு பெருகி வந்த சீமான் அவர்களின் செல்வாக்கு தற்போது மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்களும் மத்தியில் வெகுவாக குறைந்தே வருகிறது. முதலில் கடவுள் மறுப்புக் கோட்பாடு என்று இருந்த சீமான் அவர்கள் இன்று இந்து மதம், கடவுள் வழிபாடு என்று மாறிவிட்டதே என்ற கேள்வியும் எழ தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது