Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலக பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் இவருக்கா?

அமெரிக்காவைச் சேர்ந்த 50 வயதாகும் மெக்கென்சி ஸ்காட் 2020-ம் ஆண்டுக்கான உலக பணக்கார பெண்கள் பட்டியலில்  பிடித்துள்ளார். 50 வயதாகும் அவரது தற்போதைய சொத்து மதிப்பு 6 ஆயிரத்து 800 கோடி டாலராகும். இவர் ‘அமேசான்’ நிறுவன சி.இ.ஓ.-வும் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவருமான ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி ஆவார். மெக்கென்சி ஸ்காட் தனது கணவர் ஜெப் பெசோசுடனான 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற்றபோது அவரிடம் இருந்த ‘அமேசான்’ நிறுவன பங்குகளில் 4 சதவீத பங்குகளை பெற்றார்.
அவற்றின் அப்போதைய மதிப்பு ரூ.3500 கோடி டாலர் ஆகும். தற்போது அந்த பங்கு மதிப்பு இரட்டிப்பு ஆகி உள்ளதால் மெக்கென்சி ஸ்காட்டின் சொத்து மதிப்பும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. விவகாரத்து மூலம் கிடைத்த பணத்தால் மெக்கென்சி ஸ்காட் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்த பணக்காரர்களில் அவர் 12-ம் இடத்தில் உள்ளார்.
Exit mobile version