Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘வாரிசு’ படக்குழுவுடன் இணையப்போகும் சிவகார்த்திகேயன் ? லேட்டஸ்ட் அப்டேட் !

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு என்று ஒரு தனி இடமுண்டு, இவரது படங்கள் பெரும்பாலும் குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக இவரது படங்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது இவர் தற்போது பிஸியான நடிகராகவும் இருந்து வருகிறார், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ப்ரின்ஸ்’ படம் படுதோல்வியடைந்தது. இருப்பினும் இதனை தொடர்ந்து அடுக்கடுக்காக படங்கள் குவிந்துள்ளது. தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார், இதில் இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கார்ட்டூன் ஆர்டிஸ்ட்டாக நடிக்கிறார், இதில் இயக்குனர் மிஸ்கின் மற்றும் சரிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.Mandela Fame Madonne Ashwin Directional Sivakarthikeyan Maaveeran Movie  Announced | சிவகார்த்திகேயனா இது வெளியானது மாவீரன் படத்தின் அறிவிப்பு |  Movies News in Tamil

இதுமட்டுமல்லாது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார், தற்போது இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக இவரது நடிப்பில் நீண்ட நாள் கிடப்பில் கிடக்கும் ‘அயலான்’ படம் அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் வாரிசு படத்தின் தயாரிப்பு குழுவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. வாரிசு படத்தின் தயாரிப்பு குழு தெலுங்கில் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது, தற்போது விஜய்யின் வாரிசு படம் மூலமாக தமிழில் தனது தயாரிப்பை செய்துள்ளது.THE ALIEN IS HERE! Sivakarthikeyan's 'Ayalaan' astounding first look -  Tamil News - IndiaGlitz.com

மேலும் அதிக தமிழ் மொழிபடங்களை தயாரிக்க நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகவும் அதன்படி சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை, தெலுங்கில் கப்பார் சிங், கட்டலகொண்டா கணேஷ் போன்ற பல படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஹரிஷ் கல்யாண் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version