மீல் மேக்கர் நல்லதா? கெட்டதா? எதிலிருந்து மீல்மேக்கர் வருகிறது?

0
282

மீல் மேக்கர் நல்லதா? கெட்டதா? எதிலிருந்து மீல்மேக்கர் வருகிறது?

அசைவ உணவு சாப்பிடாமல் ஒரு சிலரால் இருக்கவே முடியாது. தினமும் அசைவ உணவு கொடுத்தால் போதும் என்று நினைத்து அதை விரும்பி சாப்பிடுவார்கள் தான் அதிகம். தினமும் கோழி ,ஆடு, மீன் இறால்,நண்டு என அனைத்து வகையான அசைவ உணவுகளை சாப்பிடுவார்கள். அசைவ உணவு இல்லாமல் நாட்களைக் கடத்துவது அவர்களுக்கு பெரும் கஷ்டமாக மாறிவிடும். அப்படி இருந்தாலும் அவ்வப்போது வெள்ளி, செவ்வாய், சனி, புரட்டாசி,மார்கழி என ஒரு சிலர் அந்த நாட்களில் அசைவ உணவை தொடவே மாட்டார்கள்.

அப்பொழுதுதான் இந்த மீல் மேக்கர் நமக்கு கை கொடுக்கும்.

சோயாபீன்ஸில் இருந்து எண்ணெய் எடுத்தபின் வரும் சக்கை தான் மீல் மேக்கர். மிகவும் புரதச்சத்து அதிகம் உள்ள ஒரு உணவாகும். பழமையான காலத்தில் இந்த மீல்மேக்கர் பணக்கார வீடுகளில் மட்டுமே பரிமாற கூடிய ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது பெட்டிக் கடைகளில் கூட கிடைக்கின்றது.

என்னதான் இறைச்சியை போலவே சுவையுள்ளதாக இருந்தாலும் அது நல்லதா? கெட்டதா? நன்மை பயக்குமா? என்று அனைவருக்கும் சந்தேகம் இருக்கும்.

நிச்சயம் நல்லதுதான். மீல்மேக்கர்க்கு அதிகசத்துக்கள் உள்ளன. ஏனென்றால் தானிய வகையில் சோயா பீன்ஸ்க்குத்தான் அதிகமான புரதச் சத்துக்கள் உள்ளன. மீல்மேக்கர் என்பது அதனை தயாரித்த நிறுவனத்தின் பெயர் ஆகும்.

மீல் மேக்கர் மிகவும் நல்லதுதான். ஆனால் அதை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளும் பொழுது ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக பேணிக்காத்து கொள்ளுங்கள்