மன அழுத்தம் உங்களை வாட்டி எடுக்கிறதா? அப்போ இந்த 6 முத்தான வழிகளை பின்பற்றி அதில் இருந்து தப்புங்கள்!

0
206
#image_title

மன அழுத்தம் உங்களை வாட்டி எடுக்கிறதா? அப்போ இந்த 6 முத்தான வழிகளை பின்பற்றி அதில் இருந்து தப்புங்கள்!

நவீன கால கட்டத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலை சுமை, கடன் சுமை, விலைவாசி உயர்வு, குடும்பப் பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. இவ்வாறு அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும் பொழுது அதை சரி செய்ய உரியத் தீர்வு காணாமல் தவறான முடிவை எடுத்து விடுகின்றனர்.

அதிகப்படியான மன அழுத்தத்தில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

1)அதிகாலையில் எழுந்து பழகுங்கள். எழுந்த உடன் அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அதை ஒரு நோட் புத்தகத்தில் எழுதி வைக்கவும். எந்த நேரத்தில் என்ன வேலை செய்யப் போகிறோம் என்பதை தெளிவுபடுத்தி கொள்ளவும்.

2)ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் உரிய நேரத்திற்கு முன்னர் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இதனால் அங்கு சென்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் உடனடியாக முடியும்.

3)எந்த ஒரு வேலையும் அலைக்கழிக்காமல் விரைந்து முடிக்க பழகுங்கள். இல்லையென்றால் பின்னர் வேலை சுமை அதிகமாகி மன அழுத்தம் ஏற்பட ஆரம்பித்து விடும்.

4)புகை, மது பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு நல்ல எண்ணங்களை மட்டும் சிந்திக்க தோன்றும்.

5)தங்களால் செய்ய இயலாத அல்லது சற்று கடினமான செயல்களை இஷ்டமில்லாமல் செய்வதோடு அதை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. இதனால் மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

6)நேர்மறையாக சிந்திப்பவர்களை நண்பர்களாக்கி கொள்ளுங்கள். அவர்களிடம் பேசும் பொழுது மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கும். மன அழுத்தம் இருந்தால் அவை முழுமையாக குறையும்.