விரைவில் பிரிக்கப்படும் மாநிலங்கள்! வடதமிழ்நாடு உதயமாகுமா?

0
151

தமிழகத்தில் பல வருட காலமாக வட தமிழ்நாடு வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது, வட தமிழகத்தைப் பொருத்தவரையில் வன்னியர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட வடதமிழகத்தில் இருக்கும் வன்னியர்கள் நினைத்தால் யாரும் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற நிலையில் தான் வடதமிழ்நாடு வேண்டும் என்று பலரும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்னர் வடதமிழ்நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் கூட நடந்தனர்.ஆனால் இந்த வட தமிழ்நாடு கோரிக்கை தேசத்தின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது என்று மத்திய அரசு அப்போது கருத்து தெரிவித்தது.

இந்த நிலையில் எதிர்வரும் 2024ம் வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது இந்த தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் மகாராஷ்டிராவில் புதிதாக 3 மாநிலங்கள் கர்நாடகத்தில் 2 மாநிலங்கள் உத்திரபிரதேசத்தில் 4️ மாநிலங்கள் நாடு முழுவதும் இருக்கின்ற மாநிலங்கள் பிரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார் என கர்நாடக பொது விநியோகம் உணவு மற்றும் வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி பெலகாவியில் நிருபர்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஒருவேளை இது நடந்து விட்டால் நிச்சயமாக தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு மண்டலம் தனி மாநிலமாக உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது, இதன்மூலமாக கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே இருக்கும் செல்வாக்கை மேலும் அதிகரித்து ஆட்சி அமைக்க பாஜக இப்படி ஒரு முடிவை மேற்கொள்ளலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் வட தமிழகத்தை தனியாகப் பிரித்தால் வன்னியர்களின் செல்வாக்கை வைத்து பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு 100% இருக்கிறது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். ஆகவே பாஜக இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளுமானால் அது எந்தளவிற்கு பாஜகவிற்கு செல்வாக்காக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.