கொள்ளை போலி விளம்பரங்களில் கவனம் செலுத்திய ஆளும்கட்சி! உதயநிதி கடும் விமர்சனம்!

0
149

இந்தியா முழுவதும் வைரஸ் தொற்று கட்டுப்படுத்த இயலாமல் பரவி வருகின்றது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.அதே சமயத்தில் தடுப்பூசி போடும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், தற்சமயம் தடுப்பூசியை பல மாநிலங்கள் வீணடித்து இருப்பது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்த தடுப்பூசிகளை தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் வீணடித்து இருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. இதுவரையில் 12.10 சதவீத தடுப்பூசிகளை தமிழகத்தில் வீணடித்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசி வீணடித்தல் குறைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.இந்த சூழ்நிலையில் இந்த தடுப்பூசி வீன் அளிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த விதத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தடுப்பூசி வீணாவதற்கு அரசின் நிர்வாக குளறுபடிகள் தான் காரணம் என்று தெரிவித்து இருக்கிறார்.

இதுதொடர்பாக தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். போலியோ மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை பொது மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த மாநிலம் தான் தமிழகம் ஆனால் இந்த நோய் தொற்று தடுப்பூசிகளை வீணடித்து அதில் முதலிடத்தில் இருக்கிறது தமிழகம் என்று தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் மாதம் வரையில் நமக்கு அனுப்பப்பட்ட 54.28 லட்சம் தடுப்பூசிகளின் 12.10 சதவீதம் தடுப்பூசிகள் வீணாகி இருக்கிறது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக மத்திய அரசு கொடுத்த தகவல் ஆகும். அரசின் நிர்வாக குளறுபடியைத்தான் இது காட்டுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நோய்த்தொற்றின் தடுப்பூசிகள் தொடர்பாக விழிப்புணர்வை உண்டாக்கி அதனை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை ஒருங்கிணைப்பு இறுதிகட்ட கொள்ளை போலி விளம்பரங்களில் கவனம் செலுத்துவதுதான் அரசு முழு மூச்சாக செய்துவந்தது. அதுதான் இதற்கெல்லாம் காரணம் இவ்வாறு மக்கள் மீது அக்கறை இல்லாமல் இருந்த அரசால் இன்றைய நோய்த்தொற்றின் இரண்டாம் கட்ட அலையில் அதிக மக்கள் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4வது இடத்தில் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.