தருண் கோபி தரமான இயக்குனரா? இல்லை திறமையில்லாத இயக்குனரா?

0
212
#image_title

தருண் கோபி தரமான இயக்குனரா? இல்லை திறமையில்லாத இயக்குனரா?

தமிழ் சினிமாவில் பல்வேறு திறமைகளைக் கொண்ட பலரும் சாதிப்பதில்லை. ஒரு சிலர் தான் சாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் வித்தியாசமான கதைகளை கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரும், நுட்பமான திரைக்கதையில் சினிமா சொல்லும் பாணியும் என தமிழ் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தியவர் இயக்குனர் தருண் கோபி தான். அவரை பற்றி இங்கு பார்க்கலாம்

மதுரை சேர்ந்த இயக்குனர் தருண் கோபி அவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பிறகு சென்னை சென்று அவர் இயக்குனர் சக்தி சிதம்பரம் அவர்களிடம் உதவி இயக்குனராக சில படங்களில் பணியாற்றினார். பிறகு, கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகருமான உபேந்திரா அவர்களிடமும் உதவி இயக்குனராக இருந்தார். பிறகு சொந்தமாக படத்தை இயக்கும் முயற்சியை அவர் மேற்கொண்டார். அதன் விளைவு 2006 ஆம் ஆண்டு “திமிரு” என்ற படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. நடிகர் விஷால், வடிவேலு,நடிகை ரீமாசென் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் ஸ்ரேயா ரெட்டி – ஈஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். அவர் பேசும் மதுரைக்கார வசனங்களும் மிகவும் பிரபலமானது. பொதுவாக படங்களில் வில்லன் தான் வட்டிக்கு பணத்தை கொடுத்து பிரச்சனை செய்வது, கதாநாயகனுடன் சண்டையிடுவது, வம்பு இழுப்பது என இருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் ஒரு பெண் அதாவது படத்தின் வல்லி, கதாநாயகனுடன் சண்டையிடுவது, தன்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவது, கதாநாயகனோடு சண்டையிடுவது என வித்தியாசமான கதாபாத்திரத்தை இயக்குனர் தருண் கோபி அவர்கள் அமைத்திருந்தார்.

இப்படத்தில் “நானும் மதுரைக்காரன் தான்டா” என்று விஷால் பேசும் வசனம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

இதைத்தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு நடிகர் சிம்பு அவர்களை வைத்து காளை என்னும் படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. வணிக ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் நடிகர் சிலம்பரசன் தான் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. அதன் பிறகு நடிகர் மாதவனை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டார் தருண் கோபி. ஆனால், அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. பிறகு சொந்த நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் நடிகை ரீமாசென் அவர்களை வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டார் அதுவும் தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு மாயாண்டி குடும்பத்தார் என்னும் படத்தில் நடித்து பிரபலமானார். அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தும், திரைப்படங்கள் இயக்குவதில் அவர் கவனம் செலுத்தினார். இருப்பினும் அவருக்கு சரியான வாய்ப்பு எதுவும் அமையவில்லை.

இன்றுவரை ஒரு புதிய படங்களை இயக்குவதற்கான முயற்சியில் இயக்குனர் தருண் கோபி அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். நிறைய திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் அவர்கள் தடுமாற்றத்துடன் தமிழ் சினிமாவை சுற்றி வந்து கொண்டிருக்கிறார், இயக்குநர், நடிகருமான தருண்கோபி.