மத்திய அரசு சதி செய்கிறதா?? தமிழகத்தில் நீடிக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மேற்கொண்டு வருகிறது. தற்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளதால் தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளப் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்கலாகவே தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. நேற்று தமிழக அரசு கையிருப்பில் சுமார் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே இருந்தன. மேலும் இந்த கையிருப்புத் தடுப்பூசிகளை அடுத்து வரும் 2 நாட்களுக்கு மட்டுமே செலுத்த முடியும் என சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
மேலும் இந்த நிலையில் மத்திய அரசு தரப்பிலிருந்து தமிழகத்திற்கு இன்று வரவிருந்த 1.70 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேரவில்லை என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தற்போது நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சில நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படும் சூழல் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. ம்மேலும் பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசிப் போடும் பனி நிறுத்தப்படும் உள்ளது என நேற்று சுகாதாரத்துறை தெரிவித்தது.
மேலும் மத்திய சுகாதாரத்துறை இன்று அனுப்ப வேண்டிய 1.70 லட்சம் தடுப்பூசிகளை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பல இடங்களில் தடுப்பூசி போடும் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு இன்று தடுப்பூசி அனுப்பாத காரணத்தால் இனி வரும் நாட்களில் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.