Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வடக்கில் காங்கிரஸ் வளர்கிறதா இல்லை தேய்கிறதா ?…

வடக்கில் காங்கிரஸ் வளர்கிறதா இல்லை தேய்கிறதா ?…

சமீபத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த ராகுல் காந்தி அவர்கள் நீதி போராட்டம் நடத்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

வடக்கில் காங்கிரஸ் கட்சி மெல்ல, மெல்ல வளர்கிறது என்று சொல்லப்பட்டாலும் அங்குள்ள கிராமப்புற பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு சற்று அதிகரித்து தான் உள்ளது. வட இந்தியாவில் உள்ள பெருவாரியான ஊடகங்கள் பாரத ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒரு கருத்தும் நிலவி வருகிறது.

வட இந்திய மக்களை மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் கவர்ந்துள்ளதாகவும், அதனால் எப்போதும் பாரதி ஜனதா கட்சிக்குதான் வட இந்திய மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் அலை வட இந்தியாவில் இன்னும் வீசிக்கொண்டு தான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக மன்கி பாத், அதாவது மனதின் குரல் என்ற தலைப்பில் பிரதமர் அவர்கள் ரேடியோவில் வார வாரம் பேசி வருவது ஒரு காரணமாகும்.

வட இந்தியாவில் அதிகமானோர் மத நம்பிக்கை; இறை நம்பிக்கை கொண்டு உள்ளதால் அவர்கள் பாஜக கட்சிக்கு தான் ஆதரவளிப்பார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதையெல்லாம் தாண்டி, வரும் தேர்தலில் பெருவாரியான இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் தான் அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும்.

வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மெல்ல, மெல்ல வளர்ந்து வந்தாலும், பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் அளவுக்கு இன்னும் பல மடங்கு வளர வேண்டும் என வட இந்திய அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Exit mobile version