Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கழுத்தில் உள்ள கருமை படலம் அசிங்கமாக இருக்கிறதா? கவலை வேண்டாம் இதோ டிப்ஸ்!!

#image_title

கழுத்தில் உள்ள கருமை படலம் அசிங்கமாக இருக்கிறதா? கவலை வேண்டாம் இதோ டிப்ஸ்

எப்படி ஒருவருக்கு வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து பாதிப்பு உண்டாகிறதோ, அதேபோல் சரும பிரச்சனை உண்டாகி கழுத்துப்பகுதியில் கருமை நிறம் உண்டாகிவிடும்.

உடல் எடை அதிகமாக இருப்பதாலும், தைராய்டு சுரப்பி குறைபாடு ஏற்படவதாலும், அதிகமாக மருந்துகள் சாப்பிடுவதாலும், புற்றுநோய் போன்றவற்றால் கழுத்தை சுற்றி கருப்பான படிமம் ஏற்படும். கழுத்துப் பகுதி மட்டுமல்ல, அக்குள் மற்றும்  முகத்தில் கருமை நிறம் ஏற்படும்.

வெயிலால் சருமத்தில் நிறம் மாற்றம் உண்டாகும் என்பதற்காக நாம் முகத்திலும் கைகளிலும் மாஸ்க் அணிந்து கொள்வோம். ஆனால், கழுத்துப்பகுதியில் படும் வெயிலை மறைக்க எதுவுமே செய்யமுடியாது. இதனால் முகம் மட்டும் வெள்ளையாகவும் கழுத்துப்பகுதி கருப்பாக மாறிவிடும்.

கவலை வேண்டாம்… வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து கருமையை போக்கலாம்… அதை எப்படி என்று பார்ப்போம் –

ஆரஞ்சு பழம்

கழுத்தில் உள்ள கருமை நிறம் போக்குவதற்கு, கஸ்தூரி மஞ்சள் பொடியுடன் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து, அதை கழுத்தை சுற்றியுள்ள பகுதியில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவினால் கருமை நிறம் மாறும்.

உருளைக்கிழங்கு

கழுத்தில் உள்ள கருமை நிறம் போக்குவதற்கு, உருளைக்கிழங்கை தோல் சீவி, அதன் சாற்றை எடுத்து, அதிமதுரப் பொடியுடன் சேர்த்து கழுத்துப் பகுதியில் பூசி, அரை மணி நேரம் கழித்து கழுவினால் கருமை நிறம் மாறும்.

கொண்டலைக்கடலை

கழுத்தில் உள்ள கருமை நிறம் போக்குவதற்கு, கொண்டை கடலை மாவில், வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அரை கழுத்துப் பகுதியில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவினால் கருமை மறையும்.

கோதுமை

கழுத்தில் உள்ள கருமை நிறம் போக்குவதற்கு, கோதுமையை நீர்விட்டு ஊறவைத்து பசையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேன் சேர்த்து கலந்து கழுத்தைப் பகுதியை சுற்றி தடவி அரை மணி நேரம் கழித்து கழுவினால் கருமை நிறம் மாறும்.

Exit mobile version