Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மறைந்த முன்னாள் திமுக எம்பி மரணம் கொலையா? திசை திரும்பிய வழக்கு!

Is the death of late former DMK MP murder? The case reversed!

Is the death of late former DMK MP murder? The case reversed!

மறைந்த முன்னாள் திமுக எம்பி மரணம் கொலையா? திசை திரும்பிய வழக்கு!

மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் துணைத் தலைவர் மற்றும் திமுக எம்பியாக இருந்த மஸ்தான் திடீரென்று கடந்த 22ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் உயிர் இழப்பதற்கு முன் இவரது மகன் நிச்சயதார்த்தத்திற்காக ஐடிசி சோழா ஹோட்டலில் கோலகாலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் தலைவர் என்று அனைவருக்கும் இவரே முன் சென்று அனைவருக்கும் அழைப்பு தெரிவித்து வந்தார்.

அவ்வாறு முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு கொடுத்துவிட்டு சென்னை திரும்பு  கையில் காரில் வந்த இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இவரை அருகில் இருந்த கூடுவாஞ்சேரி தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.

இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இவரது மரணம் மர்மமாக உள்ளது என சந்தேகித்ததால், போலீசார் இவர் வரும்பொழுது இவர் வந்த காரை இயக்கிய உறவினர் மற்றும் இது சம்பந்தப்பட்ட ஐவரை கைது செய்து தற்பொழுது விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version