Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முகக்கவசம் அணியவில்லை என்றால் மரண தண்டனையா?

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டு வருகிறது. எனவே உலக நாடுகள் அனைத்தும் பல கட்டுபாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாதவருக்கு கொடூரமான தண்டனை வழங்கப்படுகிறது. அங்கு முகக்கவசம் அணியாமல் இருந்த எட்டு பேருக்கு சவக்குழி தோண்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாமல் பலரும் பொது இடங்களில் அவ்வப்போது வலம்வருகின்றனர். மக்கள் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்க, இந்தோனேசிய அரசாங்கம் பல வித்தியாசமான வழிகளைக் கையாண்டு வருகிறது. ஏபரல் மாதத் தொடக்கத்திலிருந்தே, பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை இந்தோனேசியா கட்டாயமாக்கியது.

Exit mobile version