யானைகள் இனம் அழிந்து வருகிறதா?? வனத்துறையின் திடுக்கிடும் தகவல்!!
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சத உடல் அமைப்புடன் டைனோசர் என்ற உயிரினம் வாழ்ந்து வந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்தது உலகம். பின்னர் அது குறித்த தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது.
அதே போல் இன்னும் சில தலைமுறைகளுக்கு பின் யானைகள் இனம் அழிந்து விட வாய்ப்பு உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. நீளமான தும்பிக்கை அகலமான உடலமைப்பு பெரியா கால்களைக் கொண்ட யானைகளை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் 8 யானைகள் கோவை – பாலக்காடு இடையேயுள்ள ரயில் பாதைகளில் செல்லும் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்து உள்ளது. இதனால் சமூக ஆர்வலர்கள் யானைகளைப் பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில சமயங்களில் மனிதர்களால் கூட யானைகள் உயிரிழக்க நேரிடுகிறது. காடுகள் அழிந்து வரும் உலகில் தனது உணவினையும், இருப்பிடத்ததையும் தேடி செல்லும் விலங்குகள், மனிதனின் சுயநலத்திற்காக உயிரிழக்கின்றது. இந்த வகையில் கடந்த 6 ஆண்டுகளில் 561 யானைகள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மண்டலத்தில் 167 யானைகளும், கோவை மண்டலத்தில் 134 யானைகளும் தர்மபுரி மண்டலத்தில 89 யானைகளும் உயிர்லந்துள்ளது என வனத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை மட்டுமே 7 யானைகள் மனிதர்கள் வயலில் கட்டும் மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. இதில் 3 குட்டி யானைகளும் அடங்கும். இதே போல யானைகள் உயிரிழப்பது நீடித்தால் அடுத்த சில தலைமுறைகளில் யானைகளின் இனத்தை இழக்க நேரிடும் என வனத்துறை தெரிவித்துள்ளது.