தித்திக்கும் தீபாவளி பண்டிகை இத்தனை பெயர்களில் கொண்டாடப்படுகிறதா!!

0
114
Is the festival of Tithiku Diwali celebrated by so many names!!

தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் மாறுபட்டதாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் என விதவிதமான கொண்டாட்டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் தான் தீபாவளி ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் தீபாவளி பண்டிகை குறைந்தது ஐந்து நாட்களாவது கொண்டாடப்படுகிறது. வட நாட்டில் குஜராத் பகுதியில் “தன திரயோதசி” “தண்டேராஸ்” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

நேபாளத்தில் இந்த பண்டிகை காக்திஹார் என்றழைக்கப்படுகிறது. நம் நாட்டில் தீபாவளி என்றும் சொல்வார்கள். ஆனால் இது “நரக சதுர்த்தி” என வட நாட்டில் சொல்வார்கள். மேலும் இந்த தீபாவளி “சோட்டி தீபாவளி” என்று அழைப்பர். நேபாளத்தில் “குகுர் திஹார்” எனவும், இந்த நாளில் அங்கு நாய்களுக்கு உணவிட்டு அவற்றை வழிபட்டு மகிழ்வர். தமிழகத்தில் சில இடங்களில் “இலக்குமி பூசை”, கோமாதா பூஜை, என்றும் அழைப்பார்கள்.

உத்தர பிரதேசத்தில் இந்நாளில் “கோவர்த்தன பூசை” என நிகழ்த்தப்பட்டு கண்ணன் சாமியை வழிபடுகின்றனர். “அன்னக்கூடம்” என்ற பெயர்களிலும் கொண்டாடப்படுகிறது. ஒடிசா, பீகார், அசாம் மற்றும் மேற்கு வங்க பகுதிகளில் தீபாவளி, காளி பூசையாக கொண்டாடப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் “சியாமாபூசை” என்ற பெயரில் காளிக்கு விளக்கு பூஜை செய்வார்கள்.

ஆனால் தமிழகத்தில் தீபாவளி அன்று புத்தாடை வாங்கி, இனிப்பு செய்து அனைவரும் ஒன்றாக கூடி பட்டாசு வெடித்து மகிழ்கின்றனர். தீபாவளியன்று ஜெயின் சமூகத்தினர் கொண்டாட்டம் என்பது சற்று மாறுபட்டவாறு உள்ளன. தீபாவளியன்று பட்டாசு வெடிக்க மாட்டார்கள் அகிம்சை, அமைதி என்பதை வலியுறுத்தும் சமணத்தில் சத்தம் மிகுந்த பட்டாசு வெடித்து நிகழாது. புத்த மதத்தினரும் தீபாவளியை கொண்டாடி மகிழ்வர். அதாவது மாவீரர் அசோகர் புத்த மதத்திற்கு மாறிய நாளே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.