Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலை பாரமாக இருக்கின்றதா? அதற்கு இதை செய்யுங்கள்!

#image_title

தலை பாரமாக இருக்கின்றதா? அதற்கு இதை செய்யுங்கள்!

நம்மில் பலருக்கு தலை பாரமாக இருக்கும் பொழுது அதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சில சமயங்களில் தலையில் எடை அதிகமாக இருக்கும் பொருள் வைத்தவாறு பாரமாக இருக்கும். இதனால் தீராத தலைவலி ஏற்படும். இதை குணப்படுத்த சித்தகத்தி பூவுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து மருந்து தயார் செய்து தலைக்கு பயன்படுத்தலாம். இதனால் தீராத தலைவலி இருந்தால் குணமாகும்.

அது போல தலையில் நீர் கோர்த்து இருந்தாலும், கழுத்து நரம்பு வலி இருந்தாலும், சைனஸ் பிரச்சனைகளும் குணமடைந்து விடும். இந்த பிரச்சனைகளை குணப்படுத்தும் மருந்தை தயார் செய்வது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* சித்தகத்தி பூ
* நல்லெண்ணெய்
* கஸ்தூரி மஞ்சள்
* சாம்பிராணி

செய்முறை…

அடுப்பை பற்ற வைத்து கடாய் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதில் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, சித்தகத்தி பூ இவை மூன்றையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இவை மூன்றும் நன்கு கொதித்த பின்னர் இறக்கி ஆற வைக்க வேண்டும்.

இளஞ்சூடாக ஆறிய பின்னர் இதை பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை இளஞ்சூடாக இருக்கும் பொழுது எடுத்து தலைக்கு தேய்க்க வேண்டும். பின்னர் அரை மணி நேரம் கழிந்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை செய்ய மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

Exit mobile version