சிங்கம் வாழ்ந்த குகை புரட்சி தலைவி அம்மா வசித்த இல்லம் விற்பனையா?சசிக்கலாவிற்கு பதிலடி கொடுக்கும் தீபா!!.
சென்னையில் ஜெயலலிதா அம்மா அவர்கள் வசித்த வேதா இல்லத்தை விற்பனை செய்ய இருப்பதாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்.அந்த தெய்வீகமான இடத்தில் விரைவில் குடியேற எனக்கு உரிமை உள்ளது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது,வேதாநிலையம் என்னோடைய தந்தை இல்லமானது. என்னோடைய அத்தை ஜெயலலிதா ஆகியோரின் தயார் சந்தியாவால் வாங்கப்பட்டது.என் பாட்டி மறைவிற்கு பின் அந்த இல்லம் ஜெயலலிதா அம்மாவிற்கு கொடுக்கப்பட்டது.
அப்பாவின் திருமணத்திற்கு பிறகு அவரும் அங்கயே தான் வசித்து வந்தார்.அந்நிலையில் தான் அந்த சமயம் நான் பிறந்தேன்.அப்போது சில கருத்து வேறுபாடு காரணமாக என் தந்தை அந்த இல்லத்தைவிட்டு வெளியே வந்தார்.அதன்படி அத்தை அழைக்கும் போதெல்லாம் அந்த இல்லத்திற்கு சென்று வருவோம்.
பிறகு அவரின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் அந்த இல்லத்திற்கே சென்றோம் விட்டோம். சில நாட்கள் ஓடின அப்போது ஜெயலலிதா அரசியலில் முழுமையாக உள்நுழைந்தார்.அப்போதே நாங்களும் அந்த இல்லத்தை விட்டு வெளியில் வந்து விட்டோம்.
அது தான் எங்களின் பூர்வீக சொத்து.அத்தைக்கு திருமணம் ஆகாததால் சட்ட ரீதியாக எனக்கும் என் தம்பிக்கும் தான் அந்த வீடு வந்துள்ளது என்றார்.இதைதொடர்ந்து மூன்றாவது நபர் அத்தையுடன் இருந்தார்.
அது எல்லாம் எனக்கு தேவை இல்லை மேலும் அரசியல் பயணத்தில் அத்தையுடன் எத்தனையோ பேர் அவருடன் இருந்து இருப்பார்கள்.அவர்கள் எல்லாம் சொத்துக்கு உரிமை கோர முடியாது.
ஜெயலலிதா உடன் பயணம் செய்த சசிகலா குடும்பத்தினருக்கும் இது முற்றிலும் பொருந்தும்.எங்க அத்தை வசித்த இல்லம் விற்பனைக்கு உள்ளது என யாரும் சொல்லவில்லை.அதற்காக நாங்கள் யாராயும் அணுகவில்லை.எங்களையும் யாரும் கேக்கவில்லை.வேதா இல்லத்தை பராமரிக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
அதனை காக்க வேண்டிய காட்டாயமும் எங்களுடையது. எனவே இது போன்ற கெட்ட எண்ணைகளை அடியோடு அழியுங்கள் என தீபா கூறியிருந்தார்.அவர் வெளியிட்ட இந்த ஆடியோ சமூக ஆர்வலர்களை சற்று சிந்திக்க வைக்கிறது.