Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுநீரகம் இதனால் தான் பாதிப்படைகின்றதா? மக்களே எச்சரிக்கை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

சிறுநீரகம் இதனால் தான் பாதிப்படைகின்றதா? மக்களே எச்சரிக்கை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

சிறுநீரக உறுப்பினை பாதுகாப்பது எப்படி மற்றும் அதன் சில வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.

நம் உடலில் சிறுநீரகம் என்பது இன்றியமையாத உறுப்பு ஆகும். இதில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் நம் உடல் முழுவதும் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். சிறுநீர் வெளியேறுவதன் காரணமாக நம் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை மற்றும் உப்பு வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாக வைக்கிறது. சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் ரத்த கொதிப்பு நீரிழிவு நோய் ஆகியவை ஆகும்.

சிறுநீரகத்தை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளான தாகம் எடுக்கும் போதெல்லாம் நீர் அருந்த வேண்டும் மற்றும் சிறுநீரை சரியான நேரத்தில் வெளியேற்ற வேண்டும். தினந்தோறும் மூன்று லிட்டர் அல்லது நான்கு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.புகை பிடித்தல் மற்றும் மது பழக்கம் ஆகியவற்றை தடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் காரணமாக சிறுநீரகங்கள் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்க கொள்ளலாம். பசியின் உணவு தூண்டும் பொழுது மட்டும் சாப்பிட வேண்டும் நம் உண்ணும் உணவினை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அயோடின் உப்புக்களை தவிர்த்து விட்டு கல் உப்பு மற்றும் இந்துப்பு ஆகியவற்றை உணவுகளுடன் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாக்கெட் களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் அல்லது உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்த்து கொள்வதன் காரணமாக சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் தவிர்த்துக் கொள்ளவும். வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதனை அறவே தவிர்த்து கொள்ள வேண்டும்.

மருத்துவரின் அறிவுரை இன்றி எவ்வித மாத்திரை,மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மனிதன் 7 அல்லது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும் மற்றும் காலை நேரங்களில் சிறிது தூரம் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் காரணமாக நம் சிறுநீரகத்தை பாதுகாத்துக் கொள்ளலாம் நம் உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.

 

Exit mobile version