வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கக்கூடிய மொபைல் எண்கள் பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அந்த வங்கி கணக்குகளை முழுவதுமாக முடக்குவதற்கு இந்தியன் ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூகுள் பே போன் பே மற்றும் பேடிஎம் போன்ற செயலிகளை பயன்படுத்தக்கூடியவர்கள் அதில் தாங்கள் இணையத்திற்கும் மொபைல் எண்ணை தொடர்ந்து பயன்படுத்தவில்லை என்றால் அந்த வங்கி கணக்குகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக ஒரு சிம்கார்டு 90 நாட்கள் வரை செல்போன் அழைப்புகள், மற்றும் டேட்டா என எதையும் பயன்படுத்தாமல் வைத்திருக்கப்படுகிறது என்றால் அந்த சிம் கார்டு செயல்படுத்தப்படாத மொபைல் எண்ணாக கணக்கில் கொள்ளப்படுகிறது. எனவே இது போன்ற எண்களைக் கொண்ட UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கூடியவர்களின் கணக்குகள் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதியோடு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற செயல்படுத்தப்படாத எங்களால் வங்கி கணக்குகளை பராமரிப்பதில் பல சிக்கல்கள் எழுவதாகவும் இந்த சிக்கல்களை சரி செய்வதற்காக இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது இந்த முடிவை எடுத்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களுடைய மொபைல் எண்களை மீட்டெடுக்க உடனடியாக பயன்பாட்டில் இல்லாத மற்றும் வங்கி கணக்குகளில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்களை ஆக்டிவேட் செய்த பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.