கர்ப்பமாவது தள்ளி போய்க் கொண்டே இருக்கிறதா.. இந்த சாற்றை 1 முறை குடியுங்கள்!!

0
163
Is the pregnancy still delayed.. drink this juice once!!

கர்ப்பமாவது தள்ளி போய்க் கொண்டே இருக்கிறதா.. இந்த சாற்றை 1 முறை குடியுங்கள்!!

வயல்வெளிகளில்,தெருவோரங்களில் பெயர் தெரியாத பல வகை மூலிகை செடிகள் செழிப்பாக வளர்கிறது.நாம் அதை பயனற்ற செடிகள்,விஷச்செடிகள் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம்.ஆனால் அவை கொடிய நோய்களை குணமாக்கும் ஆற்றல் வாய்ந்த மூலிகை செடிகள் என்று பலருக்கும் தெரிவதில்லை.இவ்வாறு நாம் களைச்செடி என்று நினைத்துக் கொண்டிருந்த மூலிகைகளில் ஒன்று நாயுருவி.

நாயுருவி வேர்,நாயுருவி இலை,நாயுருவி முள் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும்.நாயுருவி இலையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.கருத்தரித்தலில் தாமதம் ஏற்படும் பெண்கள் இந்த நாயுருவி மூலிகையை சாப்பிட்டு பலனடையலாம்.

நாயுருவி வேரை சுத்தம் செய்து உலர்த்தி பொடியாக்கி பற்களை துலக்கி வந்தால் மஞ்சள் கறை,பல் சொத்தை,ஈறு வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கி பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.

நாயுருவி இலையை கசக்கி சாறு எடுத்து தேமல்,படை,சொறி சிரங்கு உள்ளிட்ட தோல் பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.தேள் கடி குணமாக நாயுருவி இலையை அரைத்து அவ்விடத்தில் பூசலாம்.

நாயுருவி பொடியில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் நிற்கும்.நாயுருவி இலையை அரைத்து உருண்டையாக பிடித்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குணமாகும்.நாயுருவி இலையில் கசாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளை சந்தித்து வருபவர்கள் நாயுருவி இலையின் சாற்றை அருந்தி வந்தால் பலன் கிடைக்கும்.