லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதா? விமான நிலையத்தில் விஜய்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியானது. அதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகின்றது.
மேலும் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ அண்மையில் வெளியானது. வீடியோ வெளிவந்ததிலிருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த படம் அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். மேலும் இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய காட்சிகளை எடுத்து முடித்து விட்டதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
நேற்று வெளியான அறிவிப்பில் லியோ படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என கூறப்பட்டிருந்தது. மேலும் கமல் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த முடிவை மாற்றி கமலை நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜயின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நடிகர் விஜய் விமான நிலையத்தில் வெள்ளை நிற உடையில் வந்துள்ளார். மேலும் அவர் விமான நிலையத்தில் பணிப்புரிபவர்களிடம் கனிவாக பேசிவிட்டு செல்கிறார்.