Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானதா?

இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி போன்ற வித்தியாசமான கதையை எடுத்து மாபெரும் வெற்றியை பெற செய்து இரண்டு படத்திலேயே இவரை பற்றி பேசும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தளபதி விஜய்யை வைத்து இயக்கி உள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசனை வைத்து தான் தனது 4வது படத்தை இயக்க போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், இப்படத்தின் தலைப்பு எவனென்று நினைத்தாய் என தற்போது பிரேக்கிங் தகவலாக கிடைத்துள்ளது.

 

 

 

 

Exit mobile version