Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

BSNL ஊழியர்களை தேசத்துரோகி என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ள பாஜக எம்பிக்கு தொழிற் சங்கம் கடும் கண்டனம்?

பாஜக கர்நாடக எம்பி
ஆனந்த்குமார் ஹெக்டே சில தினங்களுக்கு முன்பு,பிஎஸ்என்எல் நிறுவனம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பினார்.மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை தேச துரோகிகள் என்றும்,மத்திய அரசுக்கு 100% சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை விரைவில் தனியார்மயமாக்வோம் என்றும், பாஜகவின் எம்பி ஆனந்த்குமார் ஹெக்டே கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதுமட்டுமின்றி ஊழியர் சங்கம் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு இதுதொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்திள்ளது.

இதுகுறித்து,
என்எஃடிஇ-பிஎஸ்என்எல் தேசிய மூத்த உதவி தலைவர் சிகே மதிவாணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதவாது:

மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர்,எப்படி பொதுவெளியில் பேச வேண்டும் என்ற மரபை மீறி ஹெக்டே உண்மையற்ற தகவல்களை பரப்பியதன் காரணமாகவும்,வேலை செய்யும் ஊழியர்களை தேசத்துரோகிகள் என்று கூறி அவமானப்படுத்தியதற்கும்,
தனது சேவையை நல்ல முறையில் வழங்கி வரும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தை அசிங்கப்படுத்தியதற்கும்,அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை புதுப்பிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் வேளையில் தனியார்மயமாக்குவோம் என பேசுவது முறையற்ற செயல் எனவே அவர் மீது பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் | தொலை தொடர்பு துறை அமைச்சர்,ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Exit mobile version