Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதயத்தில் இரத்த குழாய் அடைப்பு உள்ளதா… அதை சரி செய்ய சில வழிமுறைகள்… 

இதயத்தில் இரத்த குழாய் அடைப்பு உள்ளதா… அதை சரி செய்ய சில வழிமுறைகள்…

 

இதயத்தில் உள்ள இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்து மாத்திரைகள் இல்லாமல் சில வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தி எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

நம்மில் சிலருக்கு இதயத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் அதாவது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படும். முன்பு எல்லாம் இதனை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை ஒன்று மட்டும் தான் தீர்வாக இருந்தது. ஆனால் தற்பொழுது மருந்து மாத்திரைகள் மூலமாக அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த குழாய் அடைப்புகளை சரி செய்யலாம்.

 

இந்த பதிவில் மருந்து மாத்திரைகளும் அறுவை சிகிச்சையும் இல்லாமல் இரத்தக் குழாய் அடைப்புகைள சரி செய்ய சில வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.

 

இரத்த குழாய் அடைப்புகளை சரி செய்வதற்கான சில வழிமுறைகள்…

 

* இதயத்தை நன்கு பலமாக வைத்துக் கொள்வதற்கு மிதமான உடற்பயிற்சி அவசியம். அந்த வகையில் தினமும் நடைபயிற்சியை இதய நோயாளிகள் மேற்கொள்ளலாம். தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதால் இதயம் நன்கு வலிமை பெறும். குறைந்தது அரை மணி நேரமாவது மிதமான வேகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

 

* தினமும் சீரகத்தை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

 

* இரத்தக் குழாய் அடைப்புகள் நீங்குவதற்கு தினமும் 25 முதல் 50 கிராம் வரை வெங்காயத்தை சாப்பிடலாம். வெங்காயத்தில் இரத்தத்தை நீர்மைப்படுத்தும் தன்மை உள்ளது. மேலும் கொழுப்பை கரைக்கும் குணமும் உள்ளது. எனவே வெங்காயத்தை சாப்பிடுவதால் சுருங்கி இருக்கும் இரத்தக் குழாய்களுக்கு இரத்தம் எளிமையாக செல்லும். மேலும் இரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்புகளை கரைத்து இரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்புகளை சரி செய்யும்.

 

* தினமும் 5 பல் பூண்டினை பாலில் போட்டு கலந்து குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகள் அனைத்தும் நீங்கும். மேலும் இரத்தக் குழாய்களில் அடைப்புகள் வராமல் தடுக்கலாம். பாலில் பூண்டை போட்டு கொதிக்க வைத்தும் குடிக்கலாம். அல்லது பூண்டை இடித்து பாலில் கலந்தும் குடிக்கலாம்.

 

* இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்குவதற்கு எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர், இஞ்சி சாறு, பூண்டு சாறு நான்கையும் ஒரு கப் அளவு எடுத்து அதாவது நான்கையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்கு கொதிக்க வைத்து மூன்று பங்காக வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும். பின்னர் இதில் சம அளவு தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை ஒரு பாட்டிலில் சேர்த்து தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டால் இதய அடைப்பில் இருந்து விடுபடலாம்.

 

* இதயத்தில் உள்ள இரத்தக் குழாய் அடைப்புகளை நீக்குவதற்கு தினமும் ஒரு கப் அளவு தயிர் சாப்பிட்டா வரலாம்.

 

* இதயத்தில் உள்ள இரத்தக் குழாய் அடைப்புகள் நீங்குவதற்கு தினமும் இஞ்சி சாறு குடிக்கலாம். மேலும் இந்த இஞ்சி சாறுடன் தேன், எலுமிச்சை சாறு குடித்து வந்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.

Exit mobile version