கழுத்துப் பகுதியில் கருமை நிறம் இருக்கின்றதா!!? அதை மறைய வைக்க இந்த இரண்டு பொருட்கள் போதும்!!! 

0
77
#image_title
கழுத்துப் பகுதியில் கருமை நிறம் இருக்கின்றதா!!? அதை மறைய வைக்க இந்த இரண்டு பொருட்கள் போதும்!!!
கழுத்துப் பகுதியில் இருக்கும் கருமையான நிறத்தை போக்குவதற்கு வெறும் இரண்டு பொருள்களை மட்டும் வைத்து எவ்வாறு மருந்து தயாரித்து பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம்மில் சிலருக்கு கழுத்துப் பகுதியில் கருமை நிறம் என்பது இருக்கும். ஒரு சிலருக்கு உடல் பருமன் அதிகமாக இருப்பதால் தோன்றும். ஒரு சிலருக்கு கழுத்தில் செயின் போட்டிருப்பதாலும் ஏற்படும். இந்த கழுத்துக் கருமையானது நம்முடைய அழகு பாதிக்கப்படும்.
இந்த கழுத்துக் கருமையை மறையச் செய்வதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றது. ஒரு சிலர் நாட்டு மருந்துகளை பயன்படுத்துவார்கள். ஒரு சிலர் ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவார்கள். அவ்வாறு பயன்படுத்தும் பொழுது ஒரு சிலருக்கு இந்த மருந்து மாத்திரைகள் பயன்பட்டிருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த தீர்வை கொடுத்திருக்கும். ஒரு சிலருக்கு இது ஏமாற்றத்தை அளித்திருக்கும்.
இந்த பதிவில் கழுத்துப் பகுதியில் இருக்கும் கருமையை வெறும் இரண்டு பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு மறையச் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
* கற்றாழை ஜெல்
* விட்டமின் இ கேப்சியூல்
செய்முறை…
ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்து கொள்ள வேண்டும். அதில் விட்டமின் இ மாத்திரையில் உள்ள ஜெல்லை அந்த பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை நன்றாக நுரை பொங்கி வரும் அளவுக்கு நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.  இதோ கழுத்து கருமையை மறையச் செய்யும் மருந்து தயாராகி விட்டது. இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
இந்த மருந்தை பயன்படுத்த ஒரு பிரஷ் ஒன்று எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பிரஷ் வைத்து மருந்தை தொட்டு கழுத்தில் கருமை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும்.  பின்னர் அதன் மேல் எலுமிச்சை தில் கொண்டு 5 நிமிடம் தேய்க்க வேண்டும்.
15 நிமிடம் கழிந்த பிறகு ஒரு துணியை வைத்து துடைத்து விட வேண்டும். அதன் பின்னர் பாருங்கள் கழுத்து கருமை மறைந்திருக்கும். இதை வாரத்திற்கு இரண்டு நாள் பயன்படுத்தலாம். இதே போல் கை, கால்களில் கருமையாக இருக்கும் இடங்களில் பயன்படுத்தலாம்.